Mar 23, 2025 - 05:42 PM -
0
யாழ்ப்பாணம் நகரப்பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் இரண்டு இளைஞர்கள் இன்று (23) கைது செய்யப்பட்டனர்.
யாழ்ப்பாண மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினர் மற்றும் யாழ்ப்பாணம் போதைப்பொருள் தடுப்பு பிரிவு பொலிஸார் இணைந்து கைது நடவடிக்கையை முன்னெடுத்தனர்.
கைதான 22 மற்றும் 23 வயதான இளைஞர்களிடம் இருந்து 805 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டது.
இரண்டு நபர்களையும் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.