Mar 23, 2025 - 07:46 PM -
0
இந்தியன் பிரீமியர் லீக் (IPL) தொடரில் ஐதராபாத் மைதானத்தில் இடம்பெற்ற இரண்டாவது லீக் போட்டியில் சன்ரைசஸ் ஐதராபாத் அணி 44 ஓட்டங்களால் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியை வீழ்த்தியுள்ளது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.
அதற்கமைய, முதலில் துடுப்பெடுத்தாடிய சன்ரைசஸ் ஐதராபாத் அணி 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 286 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
அவ்வணி சார்பாக இஷான் கிஷன் ஆட்டமிழக்காமல் 106 ஓட்டங்களையும், ட்ரவிஸ் ஹெட் 67 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
ராஜஸ்தான் அணியின் பந்துவீச்சில் தேஷ்பாண்டே 3 விக்கெட்டுக்களையும் மஹீஷ் தீக்ஷன 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.
இதனைத் தொடர்ந்து 287 என்ற வெற்றி இலக்கை நோக்கிய களமிறங்கிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 242 ஓட்டங்களை மாத்திரமே பெற்று 44 ஓட்டங்களால் தோல்வியைத் தழுவியது.
ராஜஸ்தான் அணி சார்பாக துருவ் ஜூரெல் 70 ஓட்டங்களையும் சஞ்சு சம்சன் 66 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
சன்ரைசஸ் அணியின் பந்தவீச்சில் சிம்ரஜீத் சிங் மற்றும் ஹர்ஷல் பட்டேல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் கைப்பற்றினர்.
இந்த போட்டியில் சன்ரைசஸ் ஐதராபாத் அணி பெற்றுக்கொண்ட 286 என்ற ஓட்ட எண்ணிக்கையானது, இந்தியன் பிரீமியர் லீக் வரலாற்றில் அணியொன்று பெற்றுக்கொண்ட இரண்டாவது அதிகபட்ச ஓட்டமாகும். முன்னதாக இதே அணி கடந்த 2024ஆம் ஆண்டு ரோயல் செலஞ்சர்ஸ் அணிக்கு எதிராக 287 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டமையே ஐபில் வரலாற்றில் பெறப்பட்ட அதிகபட்ச ஓட்டங்களாகும்.