Mar 23, 2025 - 11:20 PM -
0
இந்தியன் பிரீமியர் லீக் (IPL) தொடரில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இடம்பெற்ற ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட போட்டியில் சென்னை அணி 4 விக்கெட்டுக்களால் வெற்றிபெற்றுள்ளது.
பலம் பொருந்திய சென்னை மற்றும் மும்பை அணிகள் இன்று (23) பலப்பரீட்சை நடத்தி இருந்தன.
ஐபிஎல் தொடரின் மூன்றாவது லீக் போட்டியாக இடம்பெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற சென்னை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.
அதற்கமைய, முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 155 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
அவ்வணி சார்பாக திலக் வர்மா 31 ஓட்டங்களையும், சூர்யகுமார் யாதவ் 29 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
சென்னை அணியின் பந்துவீச்சில் கலீல் அஹமட் 3 விக்கெட்டுக்களையும் நூர் அஹமட் 4 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.
இதனைத் தொடர்ந்து 156 என்ற வெற்றி இலக்கை நோக்கிய களமிறங்கிய சென்னை அணி 19.1 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.
சென்னை அணியின் சார்பாக ரச்சின் ரவீந்திரா ஆட்டமிழக்காமல் 65 ஓட்டங்களையும், அணித்தலைவர் ருத்ராஜ் கெய்க்வாட் 53 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்தவீச்சில் Vignesh Puthur 3 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.