உலகம்
நமீபியாவின் முதல் பெண் ஜனாதிபதியாக நெடும்போ பதவியேற்பு

Mar 24, 2025 - 06:10 AM -

0

நமீபியாவின் முதல் பெண் ஜனாதிபதியாக நெடும்போ பதவியேற்பு

ஆப்பிரிக்க நாடான நமீபியாவில் கடந்தாண்டு நவம்பர் மாதம் பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றது. இதில் தென்மேற்கு ஆப்பிரிக்க மக்கள் அமைப்பு கட்சி சார்பில் போட்டியிட்ட நெடும்போ நந்தி தைத்வா (வயது 72) 58 சதவீதம் வாக்குகள் பெற்று ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டார். 

இந்நிலையில், அவரை எதிர்த்து போட்டியிட்ட மாற்றத்திற்கான சுதந்திர தேசபக்தர்கள் கட்சி 26 சதவீதம் வாக்குகளை மட்டுமே பெற முடிந்தது. 

தலைநகர் விண்ட்ஹோயிக்கில் உள்ள பாராளுமன்றத்தில் அவரது பதவியேற்பு விழா நடைபெற்றது. 

அப்போது முன்னாள் ஜனாதிபதி நங்கோலா பும்பா அதிகாரத்தை அவரிடம் ஒப்படைத்தார். இந்த நிகழ்ச்சியில் தான்சானியா ஜனாதிபதி சாமியா சுலுஹூ ஹாசன் உள்பட பல நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். 

இதன்மூலம் நாட்டின் முதல் பெண் ஜனாதிபதி மற்றும் ஆபிரிக்காவின் 2ஆவது பெண் ஜனாதிபதி என்ற பெருமையை நெடும்போ பெற்றுள்ளார்.

Comments
0

MOST READ
01
02
03
04
05