வணிகம்
Expack சர்வதேச மகளிர் தினம் 2025 ஐ பணியிட சமத்துவத்துடன் கொண்டாடியது

Mar 24, 2025 - 11:47 AM -

0

Expack சர்வதேச மகளிர் தினம் 2025 ஐ பணியிட சமத்துவத்துடன் கொண்டாடியது

அபர்தீன் ஹோல்டிங்ஸ் (பிரைவட்) லிமிடெட் நிறுவனத்தின் துணை நிறுவனமும், இலங்கையின் முன்னணி அலைவுநெளிவுள்ள பொதித் தீர்வுகள் உற்பத்தியாளரான Expack Corrugated Cartons PLC, சர்வதேச மகளிர் தினம் 2025ஐ, களனியில் அமைந்துள்ள தனது நவீன வசதிகள் படைத்த தொழிற்சாலை வளாகத்தில் ஊக்குவிப்பு நிகழ்வுடன் கொண்டாடியது. பெண்களின் பெறுமதி வாய்ந்த பங்களிப்பை கௌரவிக்கும் வகையிலும், பாலின சமத்துவம், வலுவூட்டல் மற்றும் பணியிட நலன்பேணல் ஆகியவற்றுக்கான Expack இன் அர்ப்பணிப்பை மீள உறுதி செய்வதாகவும் அமைந்திருந்தது. 

நிறுவனத்தின் பரந்த DEI கொள்கைகளுக்கமைய, தனது 300 வலிமையான பணியாளர்களுக்கு சிறந்த பணியிடச் சூழலை ஏற்படுத்திக் கொடுத்து, உடல்சார் நலனை மேம்படுத்துவதில் இந்த ஆண்டின் கொண்டாட்டங்கள் கவனம் செலுத்தியிருந்தன. நிகழ்வின் அங்கமாக, உயர் அர்ப்பணிப்பு, தலைமைத்துவம் மற்றும் தமது நிலைகளில் புத்தாக்கம் ஆகியவற்றை வெளிப்படுத்தியிருந்த சிறந்த பெண் ஊழியர்களை Expack கௌரவித்திருந்தது. அதனூடாக, பணியிடங்களில் பெண்களின் அர்ப்பணிப்பை மேம்படுத்துவது மற்றும் கௌரவிப்பதில் நிறுவனம் கொண்டுள்ள ஈடுபாடு உறுதி செய்யப்பட்டுள்ளது. 

நிகழ்வுக்கு மேலும் ஊக்கத்தை வழங்கும் வகையில், சிறப்பு மனித வளங்கள் மற்றும் கூட்டாண்மை ஆளுகை நிபுணரான ரசினி அயந்தி பண்டார, நவீன சமூகத்தில் பெண்களின் வியாபித்துச் செல்லும் நிலை தொடர்பான விளக்கங்களை பகிர்ந்திருந்தார். மூலோபாய மனித வளங்கள், தலைமைத்துவ விருத்தி மற்றும் பணிப்பாளர் சபை ஆளுகை போன்றவற்றில் தாம் கொண்டுள்ள ஆழமான அனுபவத்தைக் கொண்டு, பணியிடத்தில் பாலின சமத்துவத்தின் முக்கியத்துவத்தை பண்டார வலியுறுத்தியிருந்ததுடன், நிபுணத்துவ வளர்ச்சிக்காக வாய்ப்புகளை பின்பற்றுமாறு பெண்களை ஊக்குவித்திருந்தார். 

பாலின சமத்துவமான தொழில்நிலை வாய்ப்புகளை Expack பின்பற்றியுள்ளதுடன், சமத்துவத்தில் ஆண்கள் மற்றும் பெண்கள் இருபாலாரும் நன்மதிப்புடனான வெகுமதிகளை பெறுவதை உறுதி செய்துள்ளது. சகல ஊழியர்களுக்கும் தமது மேலதிகாரிகளுடன் எந்நேரத்திலும் தொடர்பு கொள்ளக்கூடிய கொள்கையை கொண்டுள்ளதுடன், நிறுவனத்தின் வெற்றிகரமான செயற்பாடு மற்றும் பரந்த பொருளாதாரத்தில் பெண்கள் பெறுமதி வாய்ந்த அத்தியாவசியமான பங்களிப்பாளர்கள் என்பதையும் பேணியுள்ளது. 

Expack இல் பெண் வலுவூட்டல் என்பது தலைமைத்துவத்திலிருந்து மேற்கொள்ளப்படுவதுடன், பாலின பாகுபாடு மற்றும் பக்கசார்பு ஆகியவற்றுக்கு எதிராக பூஜ்ஜிய சகிப்புத்தன்மைக்கான உறுதிப்பாட்டுடன் இது பின்பற்றப்படுகிறது. பெண்களுக்கு பணியிடத்தில் எழக்கூடிய அழுத்தங்கள் தொடர்பில் நிறுவனம் தொடர்ச்சியாக கவனம் செலுத்தி, அவற்றை நிபுணத்துவ மற்றும் தனிப்பட்ட வாழ்வில் ஏற்படக்கூடிய நீண்ட கால தாக்கமாக கருதி தவிர்க்கும் வகையில் செயலாற்றுகிறது. பன்முகத்தன்மை மற்றும் உள்ளடக்கம் ஆகியவற்றுக்கு பெறுமதி சேர்க்கும் நிறுவனம் எனும் வகையில், மதம், இனம், வயது, பாலினம் அல்லது பல்வேறு நம்பிக்கைகள் போன்ற எவ்விதமான வித்தியாசமின்றி தனிநபருக்கு தமது கருத்துகளை வெளிப்படுத்தும் சூழலை பேணுவதில் Expack பெருமை கொள்கிறது. ஆலோசனை நடவடிக்கைகள், தலைமைத்துவ பயிற்சி மற்றும் ஆரோக்கியமான பணி-வாழ்க்கை சமநிலையை ஊக்குவிக்கும் திட்டங்களினூடாக பாலின சமத்துவத்துக்கு ஆதரவளிக்கும் நடவடிக்கைகளை நிறுவனம் தொடர்ச்சியாக முன்னெடுக்கிறது. 

பணியிட சிறப்புக்காக Expack பேணும் அர்ப்பணிப்புக்காக, ஆசியாவின் சிறந்த 100 பணியிடங்களில் ஒன்றுக்கான கௌரவிப்பு தொடர்ச்சியாக 5 வருடங்களாகவும், இலங்கையிலுள்ள சிறந்த 50 பணியிடங்களில் ஒன்று எனும் கௌரவிப்பு 6 வருடங்களாகவும் பெற்றுள்ளது. சர்வதேச மகளிர் தினம் 2025 கொண்டாட்டங்களினூடாக, பெண்கள் வலுவூட்டப்படுவது, கௌரவிக்கப்படுவது மற்றும் உயர்வடைய மற்றும் தலைமைத்துவமேற்க சமமான வாய்ப்புகள் வழங்கப்படும் சூழலை ஊக்குவிப்பதில் நிறுவனம் காண்பிக்கும் அர்ப்பணிப்பு வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

Comments
0

MOST READ
01
02
03
04
05