Mar 24, 2025 - 01:34 PM -
0
கல்வனைஸ்ட் செய்யப்பட்ட உருக்கு இரும்புக் கம்பிகள் உற்பத்தியில் இலங்கையில் முன்னோடியாகத் திகழும் Lanka Special Steels Ltd. (LANKA SSL), அதன் புதிய தயாரிப்பான LANKA SSL AGRI-GOLD ஐ உத்தியோகபூர்வமாக அறிமுகம் செய்துள்ளது. இதில் புதிய GI wire மற்றும் barbed wire ஆகியன அடங்கியுள்ளன. இவை விவசாய சமூகங்களின் தேவைகளை நிவர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. அதனூடாக நீடித்த பாவனை, வலிமை மற்றும் நீண்ட காலம் நிலைத்திருக்கும் வினைத்திறன் போன்றன உறுதி செய்யப்படுகின்றன.
அறிமுகத்தை குறிக்கும் வகையில், LANKA SSL எம்பிலிபிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த “விவசாய சங்கத்தின்” அங்கத்தவர்களுக்கு விழிப்புணர்வூட்டும் நிகழ்வை முன்னெடுத்திருந்தது. அதற்காக எம்பிலிபிட்டிய விவசாய அபிவிருத்தி நிலையத்தின் ஆதரவையும் பெற்றிருந்தது. இந்தத் திட்டத்தினூடாக உள்நாட்டு விவசாயிகளுக்கு விவசாய நடவடிக்கைகளில் உயர் தரம் வாய்ந்த GI மற்றும் barbed wires பயன்பாடு பற்றிய விழிப்புணர்வு வழங்கப்பட்டதுடன், பண்ணை பாதுகாப்பு, வேலியிடல் மற்றும் பயிர் காப்பு போன்றன தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டிருந்தன.
எம்பிலிபிட்டியவைச் சேர்ந்த 60 முன்னணி விநியோகத்தர்களுடனான சந்திப்பை நிகழ்வு கொண்டிருந்தது. அவர்களுக்கு LANKA SSL AGRI-GOLD தெரிவுகள் தொடர்பான முக்கிய தகவல்களை வழங்கியிருந்தது. விற்பனையாளர்களுக்கு இந்த தயாரிப்பின் தொழினுட்ப சிறப்பு மற்றும் சந்தை வாய்ப்பு பற்றி அறிந்து கொள்ள இந்த நிகழ்வு உதவியாக அமைந்திருந்ததுடன், LANKA SSL மற்றும் அதன் பிராந்திய விநியோக வலையமைப்புடன் உறுதியான இணைப்பை ஏற்படுத்தியிருந்தது.
நிகழ்வில் LANKA SSL பணிப்பாளர்/பிரதம நிறைவேற்று அதிகாரி பிரவீன டி சில்வா கருத்துத் தெரிவிக்கையில், “LANKA SSL AGRI-GOLD உடன், இலங்கையின் விவசாயத் துறைக்கான எமது அர்ப்பணிப்பை நாம் மீள உறுதி செய்வதுடன், விவசாயிகள் மற்றும் விவசாயவணிகங்கள் தங்கியிருக்கக்கூடிய உயர் தரம் வாய்ந்த தயாரிப்புகளை வழங்குகிறோம். விழிப்புணர்வூட்டும் செயற்பாடுகள் மற்றும் நெருக்கமான விற்பனையாளர் பங்காண்மைகளினூடாக, விவசாய சமூகத்தை எம்மால் வலுவூட்ட முடிவதுடன், சிறந்த பாதுகாப்பு மற்றும் வேலியிடல் தீர்வுகளையும் பெற்றுக் கொடுக்க முடிந்துள்ளது.” என்றார்.
2023 நடுப்பகுதியில் உயர் தொழினுட்பம் மற்றும் கடுமையான தர நியமங்களுக்கமைய அறிமுகம் செய்யப்பட்ட நவீன வசதிகள் படைத்த கல்வனைஸ்ட் உருக்கு இரும்பு கம்பிகள் உற்பத்தி ஆலை வசதியுடன், LANKA SSL உள்நாட்டிலும் ஏற்றுமதி சந்தைகளிலும் தொடர்ந்து தனது பிரசன்னத்தை விரிவாக்கம் செய்த வண்ணமுள்ளது. அதனூடாக, இலங்கை தொழிற்துறையில் தனது நிலையை மேலும் உறுதி செய்துள்ளதுடன், பல்வேறு தொழிற்துறைகளில் காணப்படும் உருக்கு இரும்பு தயாரிப்புகள் தொடர்பான அதிகரித்துச் செல்லும் கேள்வியை நிவர்த்தி செய்வதாகவும் அமைந்துள்ளது.
ISO 9001:2015 மற்றும் ISO 45001:2018 சான்றுகளை பெற்ற நிறுவனமான LANKA SSL இலங்கையின் கல்வனைஸ்ட் கம்பிகள் பிரிவில் சுமார் மூன்று தசாப்த காலமாக முன்னோடியாகத் திகழ்வதுடன், உறுதியான கீர்த்தி நாமம் மற்றும் வாடிக்கையாளர் இருப்பையும் கொண்டுள்ளது. அதன் வெப்பத்தில் அழுத்தப்பட்ட GI wire சந்தையில் காணப்படும் ஒரே SLS 139:2003 சான்றிதழைப் பெற்ற தயாரிப்பாகும். அதன் barbed wireக்கு SLS 31:1988 சான்றிதழ் கிடைத்துள்ளதுடன், சந்தையில் கிடைக்கும் SLS சான்றிதழ் பெற்ற ஒரே barbed wire ஆகவும் உள்ளது.
புத்தாக்கம் மற்றும் தரம் ஆகியவற்றுக்கான LANKA SSL இன் அர்ப்பணிப்பு பரந்தளவு வரவேற்பைப் பெற்றுள்ளதுடன், அதனை உறுதி CNCI Achiever Awards செய்யும் வகையில் நிறுவனத்துக்கு National Convention on Quality and Productivity (NCQP), National Business Excellence Award மற்றும் National Business Excellence Award போன்றன கிடைத்துள்ளன. மேலும், இந்தியா, கனடா, அமெரிக்கா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளுக்கு LSSL இன் விரிவாக்கம் என்பதனூடாக, உலகத் தரம் வாய்ந்த தயாரிப்புகளை விநியோகிப்பதிலும், உள்நாட்டு தொழிற்துறைகளுக்கு ஆதரவளிப்பதிலும் நிறுவனம் கொண்டுள்ள அர்ப்பணிப்பு வெளிப்படுத்தப்பட்டுள்ளது.