Mar 24, 2025 - 01:45 PM -
0
இலங்கையின் முன்னணி சீமெந்து தயாரிப்பாளரான INSEE சீமெந்து நிறுவனம் இலங்கையின் விநியோகச் சங்கிலித் துறையில் மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில் விநியோக மற்றும் பொருள் முகாமைத்துவ நிறுவனத்துடன் (ISMM) மூலோபாயக் கூட்டாண்மையை ஏற்படுத்தியுள்ளது. கொழும்பில் நடைபெற்ற புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வில் INSEE சீமெந்து நிறுவனத்தின் பிரதம செயற்பாட்டு அதிகாரி துசித் குணவர்னசூரிய மற்றும் ISMM நிறுவனத்தின் தலைவர் ஜயந்த கலேஹெவா ஆகியோர் கைச்சாத்திட்டனர். இந்த நிகழ்வில் இரு நிறுவனங்களின் பிரதிநிதிகள் பலரும் பங்கேற்றனர்.
இந்தக் கூட்டாண்மையானது இலங்கையின் விநியோகச் சங்கிலித் தரம் உயர்த்தப்படுவதை நோக்காகக் கொண்ட பரஸ்பர நன்மை பயக்கும் உறவை ஏற்படுத்துகின்றது. இந்தக் கூட்டாண்மையானது விநியோகச் சங்கிலி முகாமைத்துவத்தில் திறமையான மற்றும் தகுதிபெற்ற பணியாட் தொகுதியை உருவாக்க தொழில்துறைக்கும் கல்வித் துறைக்கும் இடையிலான இடைவெளியைக் குறைப்பது தொடர்பில் கவனம் செலுத்துகின்றது.
INSEE சீமெந்து நிறுவனத்தின் பிரதம செயற்பாட்டு அதிகாரி துசித் குணவர்னசூரிய கருத்துத் தெரிவிக்கையில் 'இலங்கையின் விநியோகச் சங்கிலியின் சிறப்பை மேம்படுத்துவதற்காக நாங்கள் இணைந்து செயற்படுவதால் இந்த மூலோபாய கூட்டாண்மை இரு நிறுவனங்களுக்கும் வெற்றியான சூழலை ஏற்படுத்தும். INSEE நிறுவனம் ஆகிய நாம் தொழில் துறையில் கொண்டுள்ள விரிவான நிபுணத்துவம் மற்றும் செயற்பாட்டு அறிவைப் பகிர்ந்துகொள்ளவிருப்பதுடன் ISMM நிறுவனத்தின் கல்விசார் திறன் மற்றும் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட பயிற்சித் திட்டங்களின் ஊடாக நன்மைகளைப் பெற்றுக்கொள்ள முடியும். விநியோகச் சங்கிலித் துறையில் வளர்ந்துவரும் தேவையை நிவர்த்தி செய்யும் வகையில் மாணவர்கள் மற்றும் துறைசார் நிபுணர்களுக்கு அர்த்தமுள்ள வாய்ப்புக்களை வழங்க நாம் அர்ப்பணிப்புடன் இருக்கின்றோம்' என்றார்.
விரிவான இந்த ஒப்பந்தத்தின் கீழ் INSEE நிறுவனமானது விநியோகச் சங்கிலி தொடர்பான நிபுணத்துவம் மற்றும் தொழில்துறையின் செயற்பாட்டு அறிவை மாணவர்கள் தொழில்சார் நிபுணர்களுடன் பகிர்ந்துகொள்ளவிருப்பதுடன் வினைத்திறனான விநியோகச் சங்கிலி செயற்பாட்டுக்கான நிஜஉலக விடயங்களை வழங்கவிருப்பதுடன் தொழில்துறை எதிர்கொள்ளும் சவால்கள் அவற்றுக்கான தீர்வுகள் பற்றிய நடைமுறைப் புரிதல்களை வழங்கவுள்ளது.
அதே நேரத்தில் INSEE நிறுவனத்தின் ஊழியர்களுக்கு ISMM நிறுவனம் தனிப்பயனாக்கப்பட்ட பயிற்சித் திட்டங்களை வழங்குவதுடன் நிறுவனத்தின் குறிப்பிட்ட தேவைகளைப் பூர்த்தி செய்யும் சிறப்பு கல்வி நிபுணத்துவம் மூலம் அவர்களின் விநியோகச் சங்கிலி அறிவை மேம்படுத்தும். அத்துடன் தகுதி பெறும் மாணவர்களுக்கு INSEE நிறுவனத்தில் உள்ளிருப்புப் பயிற்சி மற்றும் தொழில்வாய்ப்புக்களைப் பெறுவதற்கான பயிற்சிகள் வரையில் இந்த ஒப்பந்தம் நீடிக்கப்படுகின்றது. கோட்பாட்டு ரீதியாகக் கற்ற விடயங்களை நடைமுறையில் பயன்படுத்தப்படுவதை உறுதிசெய்யும் வகையிலான அனுபவத்தை வழங்குவதற்காக இரு நிறுவனங்களும் தொழிற்சாலைகளுக்கான கள விஜயங்களை ஏற்பாடு செய்து கொடுக்கும். இலங்கையில் உள்ள ஒட்டுமொத்த விநியோகச் சங்கிலிக்கான சூழல் நன்மையடையும் வகையில் தொழில்துறையின் சிறந்த நடைமுறைகளை அமுல்படுத்தப்படுவதை இந்த கூட்டாண்மையின் ஊடாக INSEE மற்றும் ISMM ஆகிய நிறுவனங்கள் ஊக்குவிக்கின்றன.
இந்தத் துறையில் உள்ள பல்வேறு பங்குதாரர்கள் இந்தக் கூட்டாண்மையின் ஊடாக நன்மையடைவர்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. மாணவர்கள் மற்றும் தொழில்சார் நிபுணர்களுக்கு தொழிலுக்கான வாய்ப்புக்கள் விரிவடைவதுடன் உயர்தரமான பயிற்சிக்கான வாயப்பும் கிடைக்கின்றது தொழில்துறைக்கான தொடர்பு ஏற்படுகின்றது. INSEE நிறுவனத்தின் பணியாளர்களைப் பொறுத்த வரையில் இந்தக் கூட்டாண்மையின் ஊடாக விநியோகச் சங்கிலிக்கான திறனை மேலும் வலுப்படுத்துவதற்குத் தேவையான விசேடமான கல்விசார் பயிற்சி கிடைக்கின்றது. பரந்த விநியோகச் சங்கிலித் துறையைப் பொறுத்தவரை இந்த ஒப்பந்தம் பொருளாதாரத்திற்கும் நேரடியாகப் பயனளிக்கும் வலுவான திறமையான பணியாளர்களை உருவாக்க உதவும்.
விநியோகச் சங்கிலி முகாமைத்துவத் திறன்களை வலுப்படுத்துவதன் ஊடாக வினைத்திறனான தொழிற்சாலைகள் பொருளாதார வளர்ச்சி மற்றும் உலகளாவிய போட்டித்தன்மை அதிகரித்தல் போன்ற நாடளாவிய ரீதியான நன்மைகள் கிடைக்கும். இந்நாட்டில் கல்வித்துறை மற்றும் தொழிற்துறை ஆகியவற்றுக்கு கிடையிலான முன்மாதிரியான ஒப்பந்தமாக இதனை மாற்றுவதற்கு இரு நிறுவனங்களும் தமது உறுதிப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளன.
இந்த்க கூட்டணியின் மூலம் இலங்கையின் விநியோக் சங்கிலி முகாமைத்துவத்தின் எதிர்காலத்தை தொடர்ந்தும் சரியான பதையில்இட்டுச் செல்வதை ISMM நிறுவனம் தொடர்வதுடன் எதிர்காலத்திற்குத் தயாரான இலங்கையின் விநியோகச் சங்கிலிச் சூழலை உறுதிப்படுத்த புத்தாக்கும் மற்றும் நிலைபேறான அபிவிருத்தியில் INSEE சீமெந்து நிறுவனம் அர்ப்பணிப்புடன் உள்ளது என்பதை இது மீண்டும் வலியுறுத்துகின்றது.