Mar 24, 2025 - 03:23 PM -
0
பங்களாதேஷ் கிரிக்கெட் வீரர் தமிம் இக்பால் மாரடைப்பால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும் தொடக்க ஆட்டக்காரரான தமிம் இக்பால் தற்போது உள்ளூர் போட்டிகளில் கவனம் செலுத்தி வருகிறார்.
இந்த நிலையில், இன்று டாக்கா பிரீமியர் டிவிஷன் லீக் போட்டி தொடரின் ஆட்டத்தில் பங்கேற்றார்.
அப்போது களத்தடுப்பில் ஈடுபட்டிருந்த போது, தமிமுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது.
பரிசோதனை செய்ததில் தமிம் இக்பாலுக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது உறுதியானதும், உடனடியாக டாக்கா வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்ல ஹெலிகாப்டர் ஏற்பட செய்யப்பட்டது.
ஆனால், தமிமின் உடல்நிலை மோசமாக இருப்பதால் பயணம் செய்ய முடியாது எனத் தெரிவித்த வைத்தியர்கள் மைதானத்திற்கு அருகே உள்ள வைத்தியசாலையில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
தமிம் இக்பாலுக்கு மாரடைப்பு ஏற்பட்ட சம்பவம் கிரிக்கெட் ரசிகர்களிடையே அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.