செய்திகள்
மேர்வின் சில்வா உள்ளிட்ட மூவர் மீளவும் விளக்கமறியலில்

Mar 24, 2025 - 03:34 PM -

0

மேர்வின் சில்வா உள்ளிட்ட மூவர் மீளவும் விளக்கமறியலில்

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு மஹர நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

கிரிபத்கொட பகுதியில் அரசாங்கத்திற்குச் சொந்தமான காணியை போலி ஆவணங்களைத் தயாரித்து விற்பனை செய்த சம்பவம் தொடர்பாக, பெலவத்தை, பத்தரமுல்லை பகுதியில் வைத்து மேர்வின் சில்வா குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகளால் அண்மையில் கைது செய்யப்பட்டார். 

முன்னாள் அமைச்சரைத் தவிர, மேலும் இரண்டு பேர் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டனர். 

அதன்படி, முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா உள்ளிட்ட மூன்று சந்தேக நபர்களும் இன்று மஹர நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது அவர்களை ஏப்ரல் 3ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டது.

குறிப்பு: - நீதிமன்ற செய்திகளுக்கு உங்கள் தனிப்பட்ட கருத்துக்களை பதிவு செய்வதை அத தெரண ஆசிரியர் குழாம் தடைசெய்துள்ளது

MOST READ
01
02
03
04
05