Mar 24, 2025 - 05:01 PM -
0
இலங்கை விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டாளர்கள் சங்கம் ஏற்பாடு செய்த சர்வதேச மகளிர் தின விமானப்பயணத்துறை நிகழ்வுக்கு DFCC வங்கி தனது ஆலோக தீர்வு மூலமாக பெருமையுடன் அனுசரணையளித்துள்ளது. நிதியியல் ரீதியாக உள்வாங்கி, தொழில் வளர்ச்சிக்கு ஆதரவளிப்பதன் மூலமாக பெண்களுக்கு வலுவூட்டுவதில் தான் காண்பித்து வரும் அர்ப்பணிப்பை இம்முயற்சியினூடாக வங்கி மீளவும் உறுதிப்படுத்தியுள்ளது.
பெண் விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டாளர்கள், சிவில் மற்றும் இராணுவத் துறைகளிலிருந்து விமானிகள் மற்றும் விமானப்பயண துறையில் முன்னேறுவதற்குத் துடிக்கின்ற தொழில்ரீதியானவர்கள் என அனைவரையும் ஒன்றுதிரட்டியிருந்த இந்நிகழ்வானது, இத்தொழிற்துறையில் முகங்கொடுக்கின்ற சவால்கள், தொழில் வளர்ச்சி மற்றும் விமானப்பயணத்துறையில் பரிணாம மாற்றங்கண்டு வருகின்ற பெண்களின் வகிபாகம் குறித்த அர்த்தமுள்ள கலந்துரையாடல்களுக்கான மேடையாகவும் மாறியது. ஈடுபாடுகள் கொண்ட குழு மட்ட கலந்துரையாடல்கள் மற்றும் இடைத்தொடர்பாடல்கள் கொண்ட கருத்துப் பரிமாற்ற அமர்வுகள் மூலமாக ஆழமான அறிவை இந்நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் பெற்றுக்கொண்டதுடன், தொழிற்துறையில் உள்ள ஏனைய சகாக்களுடன் அறிமுகங்களை ஏற்படுத்திக் கொள்ளவும் வாய்ப்புக் கிடைத்துள்ளது.
பாலின பேதமின்மையையும், பன்மைத்துவத்தையும் வலுவாக ஆதரிக்கும் ஒரு நிறுவனமாகத் திகழ்ந்து வருகின்ற DFCC வங்கி, அனைத்து துறைகளிலும் சமத்துவத்தை ஊக்குவிப்பதில் தனது அர்ப்பணிப்பை அடிக்கோடிட்டுக் காண்பித்தவாறு, இம்முயற்சிக்கு ஆதரவு வழங்கியுள்ளதையிட்டு கௌரவம் அடைந்துள்ளது. பெண்களுக்கு வலுவூட்டும் வகையில் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட நிதித் தீர்வுகள் வங்கியால் வழங்கப்பட்டு வருவதைக் காண்பித்தவாறு, DFCC வங்கியின் அத்துருகிரிய கிளையில் வைத்து, சிரேஷ்ட விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டாளர்களுக்கு DFCC ஆலோக கடனட்டைகளும் வழங்கப்பட்டு, இந்த முயற்சி குறித்த தனது உறுதிப்பாட்டை வங்கி மேலும் தெளிவாகக் காண்பித்துள்ளது. DFCC வங்கியின் உப தலைவரும், Pinnacle மற்றும் ஆலோக தீர்வுகளுக்கான தலைமை அதிகாரியுமான ஷேரா ஹசன் அவர்கள் இம்முயற்சி குறித்து கருத்து தெரிவிக்கையில், “பெண்கள் வாழ்வில் வெற்றி காண்பதற்குத் தேவையான நிதியியல் கருவிகள் மற்றும் வளங்களை அவர்களுக்கு வழங்கி வலுவூட்டுவதில் DFCC வங்கி எப்போதும் நம்பிக்கை கொண்டுள்ளது. இந்நிகழ்வுக்கு ஆதரவளித்துள்ளதன் மூலமாக, விமானப் போக்குவரத்துத் துறையிலும், அதற்கு அப்பாலும் பெண்களின் முன்னேற்றத்திலும், அவர்களுக்கு சம வாய்ப்பளித்து அவர்களையும் உள்ளடக்குவதிலும் எமது அர்ப்பணிப்பை நாம் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளோம்,” என்று குறிப்பிட்டார்.
பெண்களின் மேம்பாட்டுக்கான நிதியியல் சேவைகள் கிடைக்கும் வழிமுறைகளை ஏற்படுத்தி, அவர்கள் தத்தமது துறைகளில் வளம் காண்பதற்குத் தேவையான ஆதரவைக் கொண்டிருப்பை உறுதி செய்து, நேர்மறை மாற்றத்தை முன்னெடுப்பதில் DFCC வங்கி தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் உள்ளது. அனைவருக்கும் நிதியியல் சேவைகள் கிடைக்கப்பெறும் வழிமுறைகளைத் தோற்றுவிப்பதில் DFCC வங்கியின் இடைவிடாத இலக்கில் மற்றுமொரு சாதனையை இந்நிகழ்வுக்கான அனுசரணை குறித்து நிற்கின்றது. பெண்களின் நிதித் தேவைகளை நிறைவேற்றும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஒரு வங்கிச்சேவைத் தீர்வாக DFCC ஆலோக காணப்படுகின்றது. முன்னுரிமை அடிப்படையிலான வட்டி வீதங்கள், தனிப்பயனாக்கம் செய்யப்பட்ட நிதித் தீர்வுகள், மற்றும் பெண்கள் தமது நிதி இலக்குகளை அடைவதற்கு உதவுகின்ற பிரத்தியேக ஆதரவு உள்ளிட்ட பல்வேறு பிரத்தியேகமான வரப்பிரசாதங்களை இது அவர்களுக்கு வழங்குகின்றது.
DFCC வங்கி குறித்த விபரங்கள்
1955 ம் ஆண்டில் நிறுவப்பட்ட DFCC வங்கி பிஎல்சி, 1956 முதல் கொழும்பு பங்குப் பரிவர்த்தனைச் சந்தையில் நிரற்படுத்தப்பட்டுள்ளதுடன், இலங்கையின் முன்னணி நிதி நிறுவனங்களில் ஒன்றாகத் திகழ்ந்து வருகின்றது. இலங்கை மத்திய வங்கியின் ஒழுங்குமுறையின் கீழ் இயங்குவதுடன், Fitch Ratings இடமிருந்து A (lka) தரப்படுத்தலையும் பெற்றுள்ள இவ்வங்கி, திறைசேரி, முதலீடு மற்றும் வாணிபக் கடன் தீர்வுகளுடன் சேர்த்து, தனிநபர், வர்த்தக, சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகளுக்கான விரிவான வங்கிச்சேவைகள் அனைத்தையும் வழங்கி வருகின்றது.
வாடிக்கையாளர்களை மையப்படுத்தியும் மற்றும் நிலைபேணத்தக்க புத்தாக்கத்தை அடிப்படையாகவும் கொண்டு, DFCC MySpace போன்ற டிஜிட்டல் தளங்கள், 139 கிளைகளைக் கொண்ட வலையமைப்பு மற்றும் LankaPay வலையமைப்பிலுள்ள 5,500 க்கும் மேற்பட்ட ATM மையங்கள் ஆகியவற்றை உள்ளடக்கி, இடைவிடாத மற்றும் பாதுகாப்பான வங்கிச்சேவை அனுபவத்தை DFCC வங்கி வழங்கி வருகின்றது. நிலைபேற்றியல் சார்ந்த முயற்சிகளுக்கான கடன் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முயற்சிகள் ஆகியவற்றுக்காக அங்கீகாரத்தைச் சம்பாதித்து, இவை தொடர்பில் முன்னிலை வகிக்கும் நிறுவனமாகத் திகழ்ந்து வரும் DFCC வங்கி, சூழல் மீதான தாக்கங்களைக் குறைத்து, நீண்ட கால அடிப்படையில் பொருளாதார நெகிழ்திறனை வளர்ப்பதில் அர்ப்பணிப்புடன் உள்ளது.