சினிமா
கணவரை திருடுறாங்க - மனைவி பரபரப்பு குற்றச்சாட்டு!

Mar 24, 2025 - 05:46 PM -

0

கணவரை திருடுறாங்க - மனைவி பரபரப்பு குற்றச்சாட்டு!

நடிகர் மதுரை முத்து விஜய் டிவியின் பல்வேறு காமெடி நிகழ்ச்சிகளில் பங்கேற்று ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார். மேலும் வெளியிடங்களிலும் பல நிகழ்ச்சிகள் நடத்தி மக்களை கவர்ந்து வருகிறார். 

இவருடைய முதல் மனைவி இறந்த பிறகு தன்னுடைய குழந்தைகளுக்காக இரண்டாவதாக நீத்து என்ற பெண்ணை திருமணம் செய்தார். 

தற்போது, தனது சொந்த ஊரில் மறைந்த முதல் மனைவி மற்றும் அப்பாவிற்காக ஒரு கோவில் அமைத்து வருகிறார். விரைவில் அதன் கும்பாபிஷேகம் நடைபெற இருக்கிறது. இதற்குப் பின்னர், அதே இடத்தில் ஆதரவற்றோர் இல்லம் ஒன்றையும் கட்ட உள்ளதாக மதுரை முத்து தெரிவித்துள்ளார். 

இந்த நிலையில் அவருடைய இரண்டாவது மனைவி சமீபத்தில் வெளியிட்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

அந்த வீடியோவில், சில பெண்கள் தங்களது உடை மற்றும் தோற்றத்தை மாற்றி ஆண்களை கவர்வதாகவும், பெண்கள் தங்கள் கணவர்களை பாதுகாக்க போராடி வருகிறார்கள் என்று கூறியுள்ளார். அவருடைய இந்தக் கருத்துகள் சமூக வலைதளங்களில் தற்போது வைரல் ஆகி வருகிறது.

Comments
0

MOST READ
01
02
03
04
05