Mar 24, 2025 - 06:19 PM -
0
விஜய் நடிப்பில் வெளியாக இருக்கும் ஜனநாயகன் திரைப்படத்தின் வெளியீட்டுத் திகதி உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விஜய்யின் 69வது மற்றும் கடைசி படமான ஜனநாயகன், அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், படம் அடுத்த ஆண்டுக்கு தள்ளி போடப்பட்டிருப்பதை நினைத்து விஜய் ரசிகர்கள் வேதனை அடைந்துள்ளனர்.