செய்திகள்
வவுனியாவில் இராணுவம் மற்றும் பொலிசார் இணைந்து திடீர் சுற்றிவளைப்பு

Mar 24, 2025 - 08:06 PM -

0

வவுனியாவில் இராணுவம் மற்றும் பொலிசார் இணைந்து திடீர் சுற்றிவளைப்பு

வவுனியா, தேக்கவத்தைப் பகுதியில் இராணுவம் மற்றும் பொலிசார் இணைந்து திடீர் சுற்றி வளைப்பு மேற்கொண்டு தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.


பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பில் தேடப்படும் நபர்களை கைது செய்தல் மற்றும் போதைப் பொருளை கட்டுப்படுத்தும் நோக்கில் குறித்த விசேட நடவடிக்கை இன்று (24) மாலை மேற்கொள்ளப்படடது.


வவுனியா சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சோமரத்ன விஜயமுனி அவர்களின் ஆலோசனைக்கு அமைய வவுனியா தலைமை பொலிஸ் பொறுப்பதிகாரி ஜே.ஏ.ஏ.எஸ்.ஜெயக்கொடி அவர்களின் வழிகாட்டலில் சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகர் விஜயவன்ச தலைமையில் இந்த நடவடிக்கை சுமார் 3 மணி நேரம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.


இதன்போது, வவுனியா தேக்கவத்தை ஆலடி சந்தியில் இருந்து தேக்கவத்தை மைதானம் வரையிலான பகுதியில் விசேட தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.


நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர்களை கைது செய்தல், குற்றச்செயல்கள் தொடர்பில் தேடப்படும் நபர்களை கைது செய்தல், போதைப் போருள் பாவனையை கட்டுப்படுதல் போன்ற திட்டங்களுக்கு அமையவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.

--

Comments
0

MOST READ
01
02
03
04
05