Mar 25, 2025 - 09:07 AM -
0
இந்த ஆண்டு வாகன இறக்குமதியின் போது எவ்வித வரி திருத்தங்களும் செய்யப்படாது என்று ஜனாதிபதியின் சிரேஷ்ட பொருளாதார ஆலோசகர் துமிந்த ஹுலங்கமுவ தெரிவித்துள்ளார்.
அதன்படி, சந்தையில் வாகன விலைகளிலும் இந்த ஆண்டு எவ்வித மாற்றமும் ஏற்படாது என்று அவர் சுட்டிக்காட்டுகிறார்.
நேற்று (24) இரவு டிவி தெரணவில் ஒளிபரப்பான 360 நிகழ்ச்சியில் பங்கேற்ற போது, ஜனாதிபதியின் சிரேஷ்ட பொருளாதார ஆலோசகர் துமிந்த ஹுலங்கமுவ இதனை குறிப்பிட்டார்.