செய்திகள்
தேர்தல் முறைப்பாடுகள் தொடர்பில் பொலிஸார் வௌியிட்ட அறிக்கை

Mar 25, 2025 - 10:14 AM -

0

தேர்தல் முறைப்பாடுகள் தொடர்பில் பொலிஸார் வௌியிட்ட அறிக்கை

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுடன் தொடர்புடைய தேர்தல் விதி மீறல்கள் மற்றும் வன்முறைச் செயல்கள் தொடர்பில் பொலிஸ் தலைமையகம் விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.


நேற்று (24) நாடளாவிய ரீதியில் உள்ள பொலிஸ் நிலையங்களுக்கு இரண்டு தேர்தல் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


அதன்படி, தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வீடியோ ஒன்று பேஸ்புக்கில் பதிவேற்றப்பட்டுள்ளதாகக் கூறி, பொலன்னறுவை பொலிஸ் பிரிவில் உள்ள சிறிபுர பொலிஸ் நிலையத்தில் வேட்பாளர் ஒருவர் முறைப்பாடு அளித்துள்ளார்.


மேலும், அரசியல் கட்சி ஒன்றை விளம்பரப்படுத்தும் வகையில் பாரிய விளம்பரப் பலகை ஒன்று காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாக மாத்தளை பொலிஸ் பிரிவில் உள்ள மஹாவெல பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடு ஒன்று கிடைத்துள்ளது.


அதன்படி, மஹாவெல பொலிஸார் அந்தப் பலகையை அகற்ற நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Comments
0

MOST READ
01
02
03
04
05