Mar 25, 2025 - 11:04 AM -
0
கராத்தே மாஸ்டரும், பிரபல நடிகருமான ஷிஹான் ஹுசைனி புற்றுநோய் பாதிப்பு காரணமாக உயிரிழந்தார்.
மதுரையைச் சேர்ந்த ஷிஹான் ஹுசைனி கராத்தே மாஸ்டர். மேலும் 400 க்கும் மேற்பட்ட வில்வித்தை வீரர்களுக்கு பயிற்சி அளித்து, தமிழகத்தில் நவீன வில்வித்தைக்கு முன்னோடியாக இருந்தவர்.
கே.பாலச்சந்தரின் புன்னகை மன்னன் படத்தில் அறிமுகமான ஷிஹான் ஹுசைனி, விஜய் நடித்த 'பத்ரி' படத்தில் அவருக்கு கராத்தே சொல்லிக் கொடுக்கும் மாஸ்டராக நடித்திருந்தார்.
கடந்த சில நாட்களாக உடல்நலப் பிரச்சினைகளை எதிர்கொண்ட ஹுசைனி, சமீபத்தில், தனக்கு இரத்தப் புற்றுநோய் மற்றும் அப்லாஸ்டிக் அனீமியா இருப்பதை அவர் உறுதிப்படுத்தினார். தனது உடல்நிலை குறித்துப் பேசிய அவர், தனது முன்னாள் மாணவர்களான பவன் கல்யாண் மற்றும் விஜய் ஆகியோரிடம் உதவி கோரிக்கைகளை முன்வைத்துள்ளதாகக் கூறினார்.
தனக்கு தினமும் இரண்டு யூனிட் ரத்தம் தேவைப்படுவதாகவும், தனது மருத்துவச் செலவுகளைச் சமாளிக்க தனது பயிற்சி மையத்தை விற்க முடிவு செய்துள்ளதாகவும் ஹுசைனி தெரிவித்தார். இதையடுத்து அவருக்கு துணை முதல்வர் உதயநிதி சார்பில் உதவி செய்யப்பட்டது.