Mar 25, 2025 - 12:11 PM -
0
கொமர்ஷல் வங்கியின் கடனட்டை மற்றும் டெபிட் அட்டை வைத்திருப்பவர்களுக்கான மிகப்பெரிய பண்டிகை பருவகால ஊக்குவிப்புத் திட்டத்துடன் வங்கியின் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டுக்கான வருடாந்த கவுண்ட்டவுன் ஆரம்பமாகி விட்டது.
இதற்கிணங்க இலங்கையின் மிகப்பாரிய தனியார் துறை வங்கியான கொமர்ஷல் வங்கி, ஏப்ரல் 30 ஆம் திகதி வரை இலங்கை முழுவதும் உள்ள 4,000 வர்த்தக நிலையங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட நாட்களில் கொமர்ஷல் வங்கி அட்டை வைத்திருப்பவர்களுக்கு பிரத்தியேகமாக 60% வரையிலான விலைக்கழிவு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.
இந்த விலைக்கழிவுகளை ஆடை மற்றும் ஃபேஷன் ஆபரணங்களை விற்பனை செய்யும் 183 வர்த்தக பங்காளர்கள், வாழ்க்கை முறை தயாரிப்புகளை விற்பனை செய்யும் 60 நிறுவனங்கள், பாதணிகள் மற்றும் தோல் அணிகளை விற்பனை செய்யும் 27 பங்குதார நிறுவனங்கள், 59 ஹோட்டல் பங்குதாரர்கள், 13 நகை பங்காளர்கள், 12 சுகாதாரப் பராமரிப்பு பங்குதாரர்கள், 12 சிகை அலங்கார, ஸ்பா மற்றும் அழகுசாதனப் பொருட்கள் விற்பனையாளர்கள், ஐந்து உயர் அங்காடிச்சந்தை பங்குதாரர்கள், ஐந்து வாகன சாதன பங்குதாரர்கள், நான்கு கடிகாரங்கள் மற்றும் அணிகள் விற்பனையாளர்கள், நான்கு பயண பங்குதாரர்கள் மற்றும் 12 உணவு பங்குதாரர்கள் ஆகியோரிடம் பெற்றுக்கொள்ளலாம் என வங்கி தெரிவித்துள்ளது.
அத்துடன் மேலும், 73 இணையத்தள விற்பனை பங்காளர்கள் இந்த ஊக்குவிப்பு காலத்தில் கொமர்ஷல் வங்கியின் கடனட்டை மற்றும் டெபிட் அட்டை வைத்திருப்பவர்களுக்கு விலைக்கழிவுகளை வழங்கவுள்ளனர்.
இதேவேளை ஊக்குவிப்பு காலத்தில் கொள்வனவு செய்த வெள்ளை பொருட்களுக்கு 60 மாதங்கள் வரை எளிதான கட்டணத் திட்டங்களையும் வங்கி வழங்குகிறது. ஒவ்வொரு பண்டிகை ஷொப்பிங் காலத்திலும், ஒவ்வொரு வாடிக்கையாளர் பிரிவினரும் ஏதாவது நன்மையை பெற்றுக்கொள்வதை உறுதி செய்வதற்கும், விலைக்கழிவுகள் உண்மையிலேயே கவர்ச்சிகரமானதாக இருப்பதை உறுதி செய்வதற்கும் நாங்கள் முழு முயற்சி எடுக்கிறோம், என்று கொமர்ஷல் வங்கியின் அட்டை மையத்தின் தலைவர் திரு. நிஷாந்த டி சில்வா தெரிவித்தார்.
எங்கள் வளர்ந்து வரும் அட்டைதாரர் தளத்துடன் பொருந்தக்கூடிய வகையில் நாங்கள் அதிகளவு வர்த்தகப்பங்குதாரர்களை அழைத்து வருகிறோம், மேலும் கொமர்ஷல் வங்கி அட்டைதாரர்கள் சிறந்த சேமிப்புகளை அனுபவிக்க முடியும் என்பதை உறுதி செய்வதற்காக வழங்கப்படும் தயாரிப்புகள் மற்றும் சேவைகளின் வரம்பை விரிவுப்படுத்தி வருகிறோம். இந்த புத்தாண்டு காலத்தில் பங்கேற்கும் வர்த்தகர்கள் மிகப்பெரிய சலுகைகளை பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள் என்றும், இலங்கை முழுவதும் பரந்த அளவிலான விற்பனை நிலையங்களில் இந்த விலைக்கழிவுகளை பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.
கொமர்ஷல் வங்கியானது உலகின் தலைசிறந்த 1000 வங்கிகளில் பட்டியலிடப்பட்ட முதலாவது இலங்கை வங்கியாகும். மற்றும் கொழும்பு பங்குச் சந்தையில் (CSE) வங்கித் துறையில் அதிக சந்தை மூலதனத்தைக் கொண்டுள்ளது. கொமர்ஷல் வங்கியானது இலங்கையின் சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சி (SME) துறைக்கு மிகப்பெரிய கடனுதவி வழங்குவதோடு, டிஜிட்டல் கண்டுபிடிப்புகளில் முன்னணியில் உள்ளது. அத்துடன் இலங்கையின் முதலாவது 100மூ கார்பன் நடுநிலை வங்கியாகும். கொமர்ஷல் வங்கியானது நாடளாவிய ரீதியில் அமைந்துள்ள கிளைகள் மற்றும் தானியங்கி இயந்திரங்களின் வலையமைப்பைச் செயல்படுத்துகிறது, மேலும் இலங்கை வங்கிகளுக்கிடையில் பரந்த சர்வதேச தடத்தைக் கொண்டுள்ளது, பங்களாதேஷில் 20 நிலையங்கள், மியன்மாரில் ஒரு நுண்நிதி நிறுவனம் மற்றும் மாலைத்தீவில் பெரும்பான்மையுடன் கூடிய முழு அளவிலான Tier I வங்கி ஆகியவற்றை கொண்டு திகழ்கிறது.வங்கியின் முழு உரித்தான துணை நிறுவனமாக CBC ஃபினான்ஸ் லிமிடெட் திகழ்கிறது. வங்கியானது அதன் சொந்த கிளை வலையமைப்பு மூலம் பரந்த அளவிலான நிதிச் சேவைகளையும் வழங்குகிறது.