செய்திகள்
அரசாங்கத்தின் பிரேரணைக்கு ஆதரவளிப்பதாக சஜித் தெரிவிப்பு

Mar 25, 2025 - 04:02 PM -

0

அரசாங்கத்தின் பிரேரணைக்கு ஆதரவளிப்பதாக சஜித் தெரிவிப்பு

தேசபந்து தென்னகோனுக்கு எதிராக கொண்டு வரப்படும் எந்தவொரு பிரேரணையையும் தனது கட்சி ஆதரிக்கும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். 

இன்று (25) நடைபெற்ற நிகழ்வொன்றில் கருத்து தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், தேசபந்து தென்னகோனை பொலிஸ்மா அதிபராக நியமித்ததன் ஊடாக அரசியலமைப்பு மீறப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். 

தனது கட்சி அதை எதிர்ப்பதாகக் கூறிய எதிர்க்கட்சித் தலைவர், தேசபந்து தென்னகோனை அந்தப் பதவிக்கு நியமித்ததற்கு முன்னாள் ஜனாதிபதி மற்றும் சபாநாயகர் இருவரும் பொறுப்பு கூற வேண்டும் என தெரிவித்தார்.

Comments
0

MOST READ
01
02
03
04
05