கிழக்கு
உணவக உரிமையாளருக்கு ஒரு மாதகால சிறை!

Mar 25, 2025 - 04:15 PM -

0

உணவக உரிமையாளருக்கு ஒரு மாதகால சிறை!

மட்டக்களப்பு, செங்கலடி பொது சுகாதாரப் பிரிவிலுள்ள உணவகம் ஒன்றில் மலசல கூடத்தில் மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற முறையில் உணவு தயாரித்து விற்பனை செய்த கடை உரிமையாளருக்கு ஒரு மாத கால சிறைத்தண்டனையும் 60,000 ரூபாவை அபராதமாக செலுத்துமாறு ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற மேலதிக நீதவான் நேற்று (24) உத்தரவிட்டார்.


குறித்த பிரதேசத்திலுள்ள உணவகங்களை சம்பவதினமான நேற்று பொது சுகாதார பரிசோதகர்கள் சுகாதார வைத்திய அதிகாரிகள் முற்றுகையிட்டு சோதனை நடவடிக்கையினை முன்னெடுத்தனர்.

 

இதன்போது உணவகத்தில் மலசல கூடத்தில் உணவு தயாரித்து விற்பனை செய்துவந்ததை கண்டுபிடித்து அந்த உணவக உரிமையாளரை கைது செய்தனர்.

 

இதனையடுத்து குறித்த உணவக உரிமையாளரை ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து அவரை ஒரு மாதகாலம் சிறையில் அடைக்குமாறும் 60,000 ரூபாவை அபதாரமாக செலுத்துமாறு நீதவான் உத்தரவிட்டார்.

--

Comments
0

MOST READ
01
02
03
04
05