செய்திகள்
தலைமை பயிற்சியாளராக சாமர சில்வா நியமனம்

Mar 25, 2025 - 04:46 PM -

0

 தலைமை பயிற்சியாளராக சாமர சில்வா நியமனம்

இலங்கை கிரிக்கெட் சபை (SLC) இலங்கை அணியின் முன்னாள் வீரர் சாமர சில்வாவை இலங்கை 19 வயதுக்குட்பட்ட தேசிய அணியின் தலைமை பயிற்சியாளராக நியமித்துள்ளது.


இந்த நியமனம் 2025 மார்ச் 1 முதல் 2026 டிசம்பர் 31 வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது.


சாமர சில்வா  75 ஒருநாள் போட்டிகள், 11 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 16 T20 சர்வதேச போட்டிகளில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார்.


இவரது பயிற்சியாளர் பதவியின் முக்கிய பொறுப்பு, 2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ICC 19 வயதுக்குட்பட்டோர் உலகக் கிண்ணத்திற்கு இலங்கை அணியை தயார்படுத்துவதாகும்.


சில்வாவின் அனுபவமும் திறமையும் இளம் வீரர்களை வளர்ப்பதற்கும், இலங்கையின் சர்வதேச இளையோர் கிரிக்கெட் செயல்திறனை மேம்படுத்துவதற்கும் உதவும் என இலங்கை கிரிக்கெட் சபை நம்பிக்கை தெரிவித்துள்ளது.

Comments
0

MOST READ
01
02
03
04
05