Mar 25, 2025 - 05:11 PM -
0
முன்னாள் இலங்கை கிரிக்கெட் நட்சத்திரமான சனத் ஜயசூரிய நடிகர் ரவி மோகனை சமீபத்தில் சந்தித்துள்ளார்.
பராசக்தி திரைப்படத்தின் படப்பிடிப்பிற்காக ரவி மோகன் மற்றும் சிவகார்த்திகேயன் இலங்கை வந்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த 22 ஆம் திகதி கொழும்பில் தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான ரவி மோகனும், கிரிக்கெட் உலகின் ஜாம்பவானான சனத் ஜயசூரியவும் சந்தித்தது புகைப்படங்களை எடுத்துள்ளனர்.
குறித்த சந்திப்பின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.