Mar 25, 2025 - 05:52 PM -
0
பொத்துவில் பிரதேசத்தில் பெண் ஒருவருடன் கள்ளக்காதலில் இருந்த போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை முகநூலில் தரவேற்றம் செய்த மட்டக்களப்பு மாவட்ட குற்ற புலனாய்வு பிரிவில் கடமையாற்றி வரும் மட்டு. மாவட்டத்தைச் சேர்ந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை இன்று (25) கைது செய்துள்ளதாக பொத்துவில் பொலிஸார் தெரிவித்தனர்.
திருமணம் ஆன பொலிஸ் கான்ஸ்டபிள் பொத்துவில் பொலிஸ் நிலையத்தில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் கடமையாற்றும் போது அங்கு முறைப்பாடு ஒன்று செய்ய சென்ற பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்படுத்தி கொண்டுள்ள நிலையில் குறித்த பெண்ணின் வீட்டிற்கு சென்று கள்ளக்காதலில் ஈடுபட்டு வந்துள்ள நிலையில் பெண்ணின் வீட்டிற்கு அருகில் இருந்தவர்கள் குறித்த விடயத்தை பொலிஸாரின் கவனத்திற்கு கொண்டு வந்ததையடுத்து அவரை பாணமை பொலிஸ் நிலையத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.
இதனை தொடர்ந்து அங்கிருந்து மட்டக்களப்பு மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டு கடமை புரிந்துவந்துள்ள நிலையில் பொத்துவில் பிரதேசத்துக்கு சென்று அங்கு குறித்த பெண்ணுடன் மீண்டும் கள்ளக்காதலில் ஈடுபட்டு வந்துள்ள போது அதனை புகைப்படம் எடுத்து முகநூலில் தரவேற்றம் செய்துள்ளதையடுத்து பாதிக்கப்பட்ட பெண் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இதனையடுத்து குறித்த பொலிஸ் கான்ஸ்டபிள் பொத்துவில் பொலிஸ் நிலையத்துக்கு சம்பவதினமான இன்று (25) வரவழைத்ததையடுத்து அவர் அங்கு சென்ற நிலையில் அவரை கைது செய்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்தவரை பொத்துவில் நீதவான் நீதிமன்றில் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட பின் அவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தவிட்டார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொத்துவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
--