Mar 25, 2025 - 08:40 PM -
0
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருந்து தற்போது குணச்சித்திர நடிகராக படங்களில் நடித்து வருபவர் பாரதிராஜா.
அவரது மகன் மனோஜ் பாரதிராஜா சில படங்களில் ஹீரோவாக நடித்த நிலையில் தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்தார்.
இந்நிலையில் தற்போது மனோஜ் பாரதிராஜா திடீர் மரணம் அடைந்து இருப்பதாக செய்தி வந்திருக்கிறது. திடீர் மாரடைப்பு காரணமாக அவர் உயிர் பிரிந்தது.
ரசிகர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழ் சினிமா துறையையும் இது அதிர்ச்சி ஆக்கி இருக்கிறது.