வடக்கு
வவுனியாவில் இளம் யுவதியின் சடலம் மீட்பு

Mar 25, 2025 - 09:26 PM -

0

வவுனியாவில் இளம் யுவதியின் சடலம் மீட்பு

வவுனியா, கலாபோகஸ்வேவ பகுதியில் கிணற்றில் இருந்து இளம் யுவதி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

 

வவுனியா, கலாபோகஸ்வேவ பகுதியில் உள்ள கிணறு ஒன்றில் பெண் ஒருவர் வீழ்ந்து இருந்ததை அவதானித்த ஊர் மக்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் பெண் ஒருவரின் சடலத்தை மீட்டதுடன், திடீர் மரண விசாரணை அதிகாரி க.கரிபிரசாத் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டிருந்தார்.

 

வவுனியா, கலாபோகஸ்வேவ பகுதியைச் சேர்ந்த 30 வயது இளம் யுவதியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார்.

 

உடற்கூற்று பரிசோதனைக்காக சடலம் வவுனியா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 

--

Comments
0

MOST READ
01
02
03
04
05