செய்திகள்
மத்திய வங்கி விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

Mar 26, 2025 - 08:00 AM -

0

மத்திய வங்கி விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

இலங்கை மத்திய வங்கி ஓரிரவு கொள்கை வீதத்தை (OPR) 8.00% ஆக பராமரிக்க  தீர்மானித்துள்ளது. 

 

நேற்று இடம்பெற்ற இலங்கை மத்திய வங்கியின் நாணயக் கொள்கைச் சபை கூட்டத்தில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.


உள்நாட்டு மற்றும் உலகளாவிய முன்னேற்றங்களை கவனமாக பரிசீலித்த பின்னரே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது. 

தற்போதைய நாணயக் கொள்கை நிலைப்பாடு, பணவீக்கம் 5% என்ற இலக்கை நோக்கி நகர்வதை உறுதி செய்யும் அதே வேளையில், உள்நாட்டு பொருளாதார வளர்ச்சியை ஆதரிக்கும் என சபை நம்பிக்கை தெரிவித்துள்ளது. 

மின்சாரக் கட்டணங்கள் மற்றும் எரிபொருள் விலைகள் மீண்டும் மீண்டும் குறைக்கப்பட்டதன் காரணமாக, பணவீக்கம் தற்போது எதிர்மறையாகவே உள்ளது. 

பணவீக்க நிலைமைகள் மார்ச் 2025 முதல் படிப்படியாக தணியும் என எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் 2025 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் பணவீக்கம் நேர்மறையாக மாறும் என கணிக்கப்பட்டுள்ளது. 

தற்போது கிடைக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையிலான முன்னறிவிப்புகள், ஆண்டு இறுதியில் பணவீக்கம் இலக்கு நிலைகளை எட்டும் என சுட்டிக்காட்டுகின்றன. 

சமீபத்திய ஆண்டு மதிப்பீடுகள், உள்நாட்டு பொருளாதாரம் 2024 ஆம் ஆண்டில் இரண்டு ஆண்டு சுருக்கங்களுக்குப் பின்னர் வலுவான மீட்சியை பதிவு செய்துள்ளதை வெளிப்படுத்தியுள்ளன. 

 

Comments
0

MOST READ
01
02
03
04
05