செய்திகள்
ஐக்கிய இராச்சியத்தின் தடை குறித்த அரசின் நிலைப்பாடு இன்று

Mar 26, 2025 - 12:14 PM -

0

ஐக்கிய இராச்சியத்தின் தடை குறித்த அரசின் நிலைப்பாடு இன்று

நாட்டின் முன்னாள் மூன்று இராணுவ பிரதானிகள் மற்றும் முன்னாள் பிரதியமைச்சர் ஒருவருக்கு எதிராக ஐக்கிய இராச்சியம் விதித்த தடைகள் குறித்த அரசாங்கத்தின் நிலைப்பாடு இன்று (26) பிற்பகல் அறிவிக்கப்படும் என்று அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். 
 

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.


இது தொடர்பான நிலைப்பாட்டை வெளியுறவு அமைச்சு இன்று பிற்பகல் அறிவிக்கும் என்றும் அமைச்சரவைப் பேச்சாளர்  மேலும் தெரிவித்தார். 

 

Comments
0

MOST READ
01
02
03
04
05