செய்திகள்
யாழில் அதீத போதைப்பொருள் பாவனையால் இளைஞன் பலி

Mar 26, 2025 - 02:02 PM -

0

யாழில் அதீத போதைப்பொருள் பாவனையால் இளைஞன் பலி

யாழ்ப்பாணத்தில் அதீத போதைப்பொருள் பாவனையால் இளைஞன் ஒருவர் கடந்த திங்கட்கிழமை (24) உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

யாழ்ப்பாணம் புறநகர் பகுதியை சேர்ந்த 30 வயதுடைய இளைஞன் ஒருவர் ஹெரோயின் போதைப்பொருளை அதீத அளவில் நுகர்ந்த நிலையில் , உயிரிழந்தார். 

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ள அதேவேளை , உயிரிழந்த இளைஞனுடன் இணைந்து போதைப்பொருளை நுகர்ந்த ஏனையவர்கள் தொடர்பிலும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

--

Comments
0

MOST READ