Mar 26, 2025 - 03:23 PM -
0
பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஐந்தாவது T20 போட்டியில் நியூசிலாந்து அணி 8 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.
அதற்கமைய, முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 128 ஓட்டங்களைப் பெற்றது.
பின்னர், 130 என்ற வெற்றி இலக்கை நோக்கிய களமிறங்கிய நியூசிலாந்து அணி 10 ஓவர்களில் 2 விக்கெட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.
இந்த வெற்றியின் ஊடாக 5 போட்டிகளைக் கொண்ட T20 தொடரை நியூசிலாந்து அணி, 4 - 1 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

