Mar 26, 2025 - 05:11 PM -
0
மஹவவில் இருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த சரக்கு ரயில் மட்டக்களப்பு ரயில் நிலையத்தை அண்டிய பகுதியில் இன்று (26) பகல் தண்டவாளத்தை விட்டு விலகியுள்ளதால் மட்டு ரயில் நிலையத்தில் இருந்து கொழும்புக்கும், கொழும்பில் இருந்து மட்டு ரயில் நிலையத்திற்குமான போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது
மஹவவில் இருந்து காலை 6.00 மணிக்கு மட்டக்களப்பு நோக்கி பயணித்த சரக்கு ரயில் பிற்பகல் 2.00 மணியளவில் தண்டவாளத்தை விட்டு விலகியதையடுத்து ரயில் தண்டவாளங்கள் சேதமடைந்துள்ளதுடன், மட்டு ரயில் நிலையத்துக்கான ரயில் சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளன.
தண்டவாளத்தை விட்டு விலகிய ரயில் எஞ்சினை மீட்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், அதனை சீர் செய்யும் வரை கொழும்பில் இருந்து மட்டு ரயில் நிலையத்திற்கு வரும் ரயில்கள் ஏறாவூர் ரயில் நிலையத்தில் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று கொழும்பு நோக்கி பயணிக்கும் ரயில்கள் ஏறாவூரில் இருந்து புறப்படுவதற்கான நடவடிக்கையை முன்னெடுத்துள்ளதாக மட்டக்களப்பு ரயில் நிலைய பணிப்பாளர் அ.பேரின்பராஜா தெரிவித்துள்ளார்.
--