செய்திகள்
தலதா கண்காட்சி ஊடாக பண மோசடியில் ஈடுபட்டதாக சுதந்த மீது குற்றச்சாட்டு

Mar 26, 2025 - 09:34 PM -

0

தலதா கண்காட்சி ஊடாக பண மோசடியில் ஈடுபட்டதாக சுதந்த மீது குற்றச்சாட்டு

சமூக ஊடக ஆர்வலர் சுதந்த திலக்சிறி என்பவர் "தலதா கண்காட்சி" நிகழ்வின் போது வசதிகளை பெற்றுக்கொடுப்பதாக தெரிவித்து அமைப்பொன்றை நிறுவி பணம் மோசடியில் ஈடுபட்டுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார். 

இது தொடர்பில் பல்வேறு தரப்பினர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடுகள் மற்றும் சமர்ப்பணங்களை தாக்கல் செய்துள்ளனர். 

இந்த மோசடியில் ஈடுபட்டவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று அவர்கள் கோருகின்றனர். 

முற்போக்கு இளைஞர் இயக்கத்தின் பிரதிநிதிகள் குழு ஒன்று குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு சென்று முறைப்பாடு ஒன்றை வழங்கியுள்ளது. 

மேலும், அடுத்த மாதம் தொடங்கவுள்ள ஸ்ரீ தலதா கண்காட்சிக்கு வரும் மக்களுக்கு கழிப்பறை வசதிகளை வழங்கும் திட்டத்தை செயல்படுத்துவதாகக் கூறி, சுதத்த திலகசிறி என்ற சமூக ஊடக ஆர்வலர் தனிநபர்களிடமிருந்து பணம் வசூலித்து நிதி மோசடி செய்துள்ளதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். 

இதேவேளை, சிங்கள பாடகர் இராஜ் வீரரத்னவும் இன்று குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகினார். 

குறித்த திணைக்களத்தின் கணினி குற்ற விசாரணைப் பிரிவு இது தொடர்பில் வாக்குமூலம் ஒன்றை வழங்குமாறு அழைப்பு விடுத்ததற்கு அமையவே, இராஜ் வீரரத்ன இன்று ஆஜராகி இருந்தார்.

 

Comments
0

MOST READ
01
02
03
04
05