Mar 26, 2025 - 11:13 PM -
0
குற்றச்செயல்களுடன் தொடர்பு பட்ட 42 பேர் காத்தான்குடி பொலிஸார் நடாத்திய திடீர் சுத்திவளைப்பு தேடுதல் நடவடிக்கைகளின் போது கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர் .
கல்லடி,நாவற்குடா, ஆரையம்பதி, புதிய காத்தான்குடி புதுக்குடியிருப்பு உட்பட இடங்களில் தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
மட்டக்களப்பு மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்கர் லலித் லீலா ரத்னவின் வழிகாட்டலில் காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆர்.எம்.ரத்நாயக்கவின் பணிப்புரையின் பேரில் பொலிஸார் குறித்த தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர்.
இதன் போது சட்டவிரோத மதுபான உற்பத்தி செய்த மற்றும் விற்பனை செய்த 28 பேரும், கேரள கஞ்சாவை வைத்திருந்த மற்றும் விற்பனையில் ஈடுபட்ட 18 பேரும் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதே நேரம் சட்டவிரோதமான முறையில் மணல் ஏறாறிவந்த ஒருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைதான நபர்கள் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
--