சினிமா
ஐஸ்வர்யா ராய் கார் மீது பேருந்து மோதல்

Mar 27, 2025 - 09:20 AM -

0

ஐஸ்வர்யா ராய் கார் மீது பேருந்து மோதல்

பிரபல பாலிவுட் நடிகரான அமிதாப் பச்சனின் மருமகள் நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சன்.
 

மும்பையில் நேற்று (26) ஐஸ்வர்யா ராய் பச்சனின் கார் மீது பேருந்து ஒன்று மோதியது. 

 

அவரது மெய்க்காப்பாளர்கள் நிலைமையை கண்டு காரை விட்டு வெளியே வந்தனர். இந்தச் சம்பவத்தால் சாலையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

 

இதுகுறித்த வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலானது. ஐஸ்வர்யா ராய்க்கு என்ன ஆச்சு என ரசிகர்கள் கருத்துகளை பதிவிட்டனர். இந்தச் சம்பவத்தின்போது நடிகை ஐஸ்வர்யா ராய் காரில் இல்லை என அறிந்து ரசிகர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

 

நடிகை ஐஸ்வர்யா ராயின் கார் மீது பேருந்து மோதியது மும்பையில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Comments
0

MOST READ
01
02
03
04
05