வணிகம்
Hemas x Hatch Slingshot 2.0: அடுத்த தலைமுறை தொழில்முனைவோரை வளர்க்கிறது

Mar 27, 2025 - 10:48 AM -

0

Hemas x Hatch Slingshot 2.0: அடுத்த தலைமுறை தொழில்முனைவோரை வளர்க்கிறது

Hatch மூலம் இயக்கப்படும் Hemas “Slingshot” accelerator ஆனது, சமீபத்தில் EdTech, HealthTech, FMCG தொழில்துறைகளில் இலங்கையின் மிகவும் நம்பிக்கைக்குரிய சில ஆரம்ப நிலை வணிகங்களை முன்னிலைப்படுத்தி முன்னெடுத்த, அதன் இரண்டாவது குழுவை ஊக்கமளிக்கின்ற Demo Day உடன் நிறைவு செய்தது. 

இந்நிகழ்வில் கலந்து கொண்ட எட்டு இறுதிப் போட்டியாளர்களில், தனிப்பயனாக்கக்கூடிய இயக்கும் உபகரணங்களை வழங்கும் ஆரம்ப நிலை வணிகமான Wheelchair House வெற்றி பெற்றது. அதே நேரத்தில் விளையாட்டுடனான கல்வி தொடர்பான இலங்கையின் மிகவும் பிரபலமான தளமான Exam Hub இரண்டாவது இடத்தைப் பிடித்தது. இந்த ஆரம்ப நிலை வணிகங்கள் ஒப்பிடி முடியாத புத்தாக்க கண்டுபிடிப்புகளையும், தொழில்துறை தலைவர்கள் மற்றும் முதலீட்டாளர்களிடமிருந்து அங்கீகாரத்தைப் பெறும் அளவிற்கான திறனையும் நிரூபித்துக் காண்பித்தன. 

இந்நிகழ்வில் பேசிய Hemas Holdings PLC இன் வியூகம் மற்றும் வளர்ச்சி பிரதம அதிகாரியான றிஸ்னி பைசல் தெரிவிக்கையில், Slingshot 2.0 ஆனது இலங்கையில் புத்தாக்கங்களை வளர்ப்பதற்கும் அடுத்த தலைமுறை தொழில்முனைவோர்களை வலுவூட்டுவதற்குமான எமது அர்ப்பணிப்புக்கு ஒரு சான்றாகும். இந்த வேகமூட்டும் செயற்பாடுகள் (accelerator) மூலம், நாம் ஆரம்ப நிலை வணிகங்களுக்கு ஆதரவளிப்பதோடு மட்டுமல்லாமல், சிறந்த யோசனைகளை செழிப்படையச் செய்து, அவற்றை அளவிட்டு, நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு சூழல் தொகுதியாக உருவாக்குகிறோம். Wheelchair House, Exam Hub உள்ளிட்ட எமது Slingshot 2.0 இறுதிப் போட்டியாளர்கள் அனைவரின் வெற்றியும் இலங்கை தொழில்முனைவுக்கான அபரிமிதமான திறனை எடுத்துக்காட்டுவதோடு, அவை அடையும் உருமாற்றம் மற்றும் வளர்ச்சிக்கான பயணத்தில் நாமும் பங்கு வகிப்பதில் பெருமிதம் கொள்கிறோம்.” என்றார். 

பங்கேற்பாளர்கள் தங்களது வணிகங்களை அளவிட உதவும் வகையில் மூலோபாய வழிகாட்டல் மற்றும் தொழில்துறை நுண்ணறிவுகளை Slingshot 2.0 வழங்கியது. கடந்த ஆறு மாதங்களில், வணிகங்களின் நிறுவுனர்கள் செயன்முறை ரீதியான கற்றலையும், தங்கள் தொழில்துறைகளில் ஆழமான அறிவையும், தயாரிப்புத் தரத்தை மேம்படுத்துதல், செயற்பாடுகளை ஒழுங்குபடுத்துதல் மற்றும் அவர்களின் வணிக மாதிரிகள் மற்றும் வளர்ச்சி உத்திகளை மேம்படுத்துதல் ஆகியவற்றை மேம்படுத்த வெளிப்படுதல் பயணங்களில் ஈடுபட்டனர். 

Demo Day நிகழ்வில், முதல் எட்டு இடத்தைப் பிடித்த ஆரம்ப நிலை வணிகங்கள் தமது முன்னேற்றப் பாதைகளை வெளிப்படுத்தினர். Wheelchair House (வெற்றியாளர்), Exam Hub (2ஆம் இடம்), Ophtha Innovations, Bistec Care, Four Elements, Phrasecode, Beautonic, Aagee.AI ஆகியன இந்த 8 இடங்களைப் பிடித்த ஆரம்ப நிலை வணிகங்களாகும். 

இந்த நிகழ்ச்சி முழுவதும், Hemas கள நிபுணர்கள் மற்றும் Hatch வலையமைப்பின் வணிக வழிகாட்டிகள் ஆகியோர் மதிப்புமிக்க தொழில்துறை நிபுணத்துவத்தை வழங்கியதுடன், வணிகத்தை அளவிடுதல் மற்றும் நிலைபேறான தன்மை தொடர்பில் தனிப்பயனாக்கப்பட்ட வழிகாட்டலையும் வழங்கினர். 

Slingshot 2.0 Demo Day ஆனது, முதலீட்டாளர்கள், வணிக நிறுவனத் தலைவர்கள் மற்றும் இலங்கையின் ஆரம்ப நிலை வணிகச் சூழல் கட்டமைப்பில் உள்ள முக்கிய நபர்களின் மாறுபட்ட கலவையை ஒன்றிணைத்தது. இந்த ஆரம்ப நிலை வணிகங்கள் தமது முன்னேற்றத்தைக் காண்பிக்கவும் புதிய வளர்ச்சி வாய்ப்புகளைத் ஏற்படுத்தவும் ஒரு சக்திவாய்ந்த தளத்தை உருவாக்கியது. 

Hatch பிரதம நிறைவேற்று அதிகாரி மெவன் பீரிஸ் கருத்துத் தெரிவிக்கையில், இந்தியாவைப் போன்ற நாடுகளிடமிருந்து எடுத்துக் கொள்வதற்கு எமக்கு சிறந்த குறிப்புகள் உள்ளன. அங்கு ஆரம்ப நிலை வணிக சூழல் கட்டமைப்பானது, கடந்த தசாப்தத்தில் பாரிய வளர்ச்சி கண்டுள்ளது. இந்த மாற்றமானது, ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி, புத்தாக்கம் மற்றும் தொழில்முனைவு தொடர்பான ஆதரவில் குறிப்பிடத்தக்க அளவிலான முதலீடுகளை செய்யும் முன்னணி பெருநிறுவனங்களால் பெரும்பாலும் இயக்கப்படுகிறது. இந்த அணுகுமுறையானது, ஆரம்ப நிலை வணிகங்களின் வளர்ச்சியை விரைவுபடுத்துவதோடு மட்டுமல்லாமல், வணிகங்களும் மிகவும் சுறுசுறுப்பாகவும் புத்தாக்கமானதாகவும் மாற உதவியுள்ளது. இறுதியில், புதிய வணிக வாய்ப்புகளைத் ஏற்படுத்தி, மதிப்பு உருவாக்கத்தை செயற்படுத்துவதன் மூலம் பரந்த பொருளாதாரத்திற்கு இது பயனளித்துள்ளது என தெரிவித்தார். இதன் மூலம் இலங்கையின் ஆரம்ப நிலை வணிக சூழல் கட்டமைப்பை ஆதரிப்பதில் வணிக நிறுவனங்கள் பங்கேற்க வேண்டிய அவசியத்தை அவர் இங்கு வலியுறுத்தினார். 

Wheelchair House மற்றும் Exam Hub ஆகியன முன்னணி இடத்தை பிடித்துள்ளமைக்கு அமைய, Hemas x Hatch Slingshot Accelerator ஆனது இலங்கையில் புத்தாக்கம், பொருளாதார வலுவூட்டல் மற்றும் தொழில்முனைவு விசேடத்துவத்தை தொடர்ச்சியாக தூண்டுகிறது. இந்த ஆரம்ப நிலை வணிகங்கள் வளர்ச்சியின் அடுத்த கட்டத்திற்குச் செல்லும்போது, ​​இலங்கையின் வணிகத் துறையின் எதிர்காலத்தை வடிவமைத்து நீடித்த தாக்கத்தை ஏற்படுத்த அவை தயாராகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments
0

MOST READ
01
02
03
04
05