வடக்கு
மக்கள் எங்களை ஆதரித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும்

Mar 27, 2025 - 10:49 AM -

0

மக்கள் எங்களை ஆதரித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும்


மன்னார் தீவு பகுதியில் முன்னெடுக்கப்பட உள்ள கணிய மணல் அகழ்வை நிறுத்தி கனிய வளங்களை பாதுகாக்க மக்கள் மன்னார் பிரதேச சபை தேர்தலில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பை ஆதரித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ கட்சியின் மாவட்ட அமைப்பாளர் டானியல் வசந்தன் தெரிவித்தார்.

 

எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் மன்னார் பிரதேச சபைக்கான வேட்புமனு நேற்று (26) மன்னார் மாவட்டச் செயலகத்தில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பாக கையளிக்கப்பட்டது.

 

அதனைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

 

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

 

எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் மன்னார் மாவட்டத்தில் மன்னார் பிரதேச சபைக்கான தேர்தல் ஒரு முக்கியமானதாக அமைந்துள்ளது.

 

மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் டைட்டானியம் எனப்படுகின்ற கனிய மணல் அகழ்வு செய்வதற்கு பல்வேறு கம்பனிகள் போட்டி போட்டுக் கொண்டு இருக்கின்றது.

 

இத்தருனத்தில் மன்னார் பிரதேச சபையை ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு கைப்பற்றுமாக இருந்தால் கனிய வளங்கள் பாதுகாக்கப்படும்.

 

எனவே மன்னார் பிரதேச மக்கள் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியை வெற்றி பெறச் செய்து கனிய வளங்களை பாதுகாக்க உறுதுணையாக இருங்கள்.

 

எனவே மன்னார் பிரதேச பை தேர்தலில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி வெற்றி பெற்று சபையை அமைக்கும் என அவர் மேலும் தெரிவித்தார்.

--

Comments
0

MOST READ
01
02
03
04
05