வணிகம்
சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடிய Michelin Sri Lanka

Mar 27, 2025 - 11:16 AM -

0

சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடிய Michelin Sri Lanka

சர்வதேச மகளிர் தினத்தில், Michelin Sri Lanka, தனது அமைப்பு முழுவதும் உள்ள பெண்களின் விலைமதிப்பற்ற பங்களிப்புகளை முன்னிலைப்படுத்தி, ஏற்பாடு செய்திருந்த உணர்வுப்பூர்வமான நிகழ்வில் 150 பெண் குழு உறுப்பினர்களை கௌரவித்தது. 

இலங்கையின் முதலாவது பார்வை திறனற்ற ஆடை வடிவமைப்பாளர் அஷ்சார்யா பீரிஸ் ஜெயக்கொடி மற்றும் நிறுவனத் தலைவர்களின் ஊக்கமளிக்கும் உரைகள், இந்த ஆண்டின் சர்வதேச மகளிர் தின தொனிப்பொருளான பல்வகைத்தன்மைக்கான நடவடிக்கையை விரைவுபடுத்துதல் என்பதற்கு உயிரூட்டின. 

பெண்களின் தொழில்முறை மற்றும் தனிப்பட்ட பயணங்களுக்கு ஒத்துழைப்பு வழங்கும் முகமாக மதிப்புமிக்க கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளும் ஒரு பட்டறையுடன் அந்த நாள் நிறைவுற்றது. சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடிய Michelin, பணியிடத்தில் பன்முகத்தன்மை மற்றும் உள்ளடக்கத்தை வளர்ப்பதற்கான அதன் தொடர்ச்சியான அர்ப்பணிப்பு, தலைமைப் பதவிகள் உட்பட நிறுவனத்தின் அனைத்துப் பாத்திரங்களிலும் போதுமான பெண் பிரதிநிதித்துவத்தின் முக்கியத்துவம் மற்றும் சமத்துவம் மற்றும் கூட்டு நுண்ணறிவுக்கான தொடர்ச்சியான முயற்சிகளின் தேவை ஆகியவற்றைப் பிரதிபலிக்கிறது.

Comments
0

MOST READ
01
02
03
04
05