வணிகம்
இலங்கையின் சிறந்த முகாமைத்துவ நிறுவனங்களில் ஒன்றாக CPM இனால் சியெட் களனி நிறுவனத்திற்கு மீண்டும் அங்கீகாரம்

Mar 27, 2025 - 11:38 AM -

0

இலங்கையின் சிறந்த முகாமைத்துவ நிறுவனங்களில் ஒன்றாக CPM இனால் சியெட் களனி நிறுவனத்திற்கு மீண்டும் அங்கீகாரம்

இலங்கை பட்டய தொழில்சார் முகாமையாளர்கள் நிறுவனத்தினால் (CPM) இலங்கையில் சிறப்பாக முகாமைத்துவம் செய்யப்படும் டயர் உற்பத்தி நிறுவனமாக சியெட் களனி ஹோல்டிங்ஸ் (CEAT Kelani Holdings) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதுடன் மேலும், சிறந்த முகாமைத்துவ நடைமுறைகளுக்கான நாட்டின் முதல் 20 நிறுவனங்களில் ஒன்றாக மீண்டும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. 

இந்த விருது விழாவில் வழங்கப்பட்ட முதல் 20 விருதுகளுக்கு மேலதிகமாக, CPM இன் 2025 ஆம் ஆண்டுக்கான பதிப்பில் டயர், ரப்பர், உலோகம் மற்றும் மர தளபாடங்கள் பிரிவில் பிரிவு விருதையும் சியெட் நிறுவனம் பெற்றுள்ளது. இலங்கையில் சிறப்பாக முகாமைத்துவம் செய்யப்படும் நிறுவனங்களில் ஒன்றாக சியெட் களனி ஹோல்டிங்ஸ் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. 

CPM விருதுகள் தலைமைத்துவம், கொள்கைகள் மற்றும் யுக்திகள், மக்கள் முகாமைத்துவம், பங்குடைமைகள் மற்றும் வளங்கள், செயல்முறைகள் மற்றும் செயல்திறன் ஆகியவற்றின் அடிப்படையில் முகாமைத்துவதில் சிறந்த நடைமுறைகளை பின்பற்றும் நிறுவனங்களை கௌரவிக்கின்றன. 

இந்த வகையான விருதுகள், முகாமைத்துவ நடைமுறைகளில் இன்னும் உயர்ந்த நிலையை அடைய தேவையான முயற்சிகளை மேற்கொள்ளவும், மக்களை மையமாகக் கொண்ட அணுகுமுறையுடன் மூலோபாய அம்சங்களை இணைப்பதில் உலகளாவிய சிறந்த நடைமுறைகளை ஏற்றுக்கொள்ளவும் எம்மை ஊக்குவிக்கின்றன, என்று சியெட் களனி ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் முகாமைத்துவப்பணிப்பாளர் திரு. ரவி தத்லானி தெரிவித்தார். 

பெரிய அளவிலான உற்பத்தி நடவடிக்கைகளுக்கான ஒரே மாதிரியான நடைமுறைகளை நாம் ஏற்கனவே தகர்த்தெறிந்துள்ளோம், மேலும், உற்பத்தித்திறன், உற்பத்தி அபிவிருத்தி, புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துதல், ஆய்வு மற்றும் அபிவிருத்தி, சந்தைத்தலைமை, நிலைத்தன்மை மற்றும் நல்ல நிறுவன குடியுரிமை ஆகியவற்றில் அரசுக்குச் சொந்தமான நிறுவனத்தை வெற்றிகரமாக தனியார்மயமாக்குவதற்கான ஒரு வழக்கு ஆய்வாக இதனை கருத முடியும். 

CPM விருதுகளுக்காக மதிப்பிடப்பட்ட ஆண்டின் சிறப்பம்சங்களில் ஒன்று, வர்த்தகநாம முதன்மைப்படுத்தலை மேம்படுத்துதல், வர்த்தகநாம பரிசீலனை மற்றும் விற்பனையை அதிகரித்தல், சியெட் கார் ரேடியல் டயர்களை ஜேர்மன் பொறியியல் டயர்களாக நிலைநிறுத்துவதில் கவனம் செலுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்ட ஒரு விசாலமான மூலோபாய சந்தைப்படுத்தல் பிரசாரத்தைத் தொடங்குவதாகும், இது இலங்கை வீதிகளில் மிகவும் கட்டுப்படுத்தப்பட்ட மற்றும் வசதியான ஓட்டுநர் அனுபவத்தை வழங்குகிறது. 

சியெட் களனி நிறுவனமானது, கார்கள், SUVகள், மோட்டார் சைக்கிள்கள், ஸ்கூட்டர்கள் மற்றும் வர்த்தக வாகனங்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான உள்நாட்டில் உதிரிப்பாகங்கள் பொருத்தப்பட்ட வாகனங்களுக்கான உயர் செயல்திறன் கொண்ட அசல் உபகரண (OEM) டயர்களை உருவாக்குவதன் மூலம் இலங்கையின் வளர்ந்து வரும் வாகன உதிரிப்பாக பொருத்துதல் துறைக்கு தனது ஆதரவை கணிசமாக அதிகரித்துள்ளது. 

இலங்கையின் நியூமேடிக் டயர் தேவைகளில் கிட்டத்தட்ட ஐம்பது சத வீதத்தை உற்பத்தி செய்யும் சியெட் கூட்டு முயற்சியில் இலங்கையில் கடந்த தசாப்தத்தில் மட்டும் 8.5 பில்லியனுக்கு மேற்பட்ட முதலீடுகளை மேற்கொண்டுள்ளது. சியெட் களனி ஹோல்டிங்ஸ் நிறுவனம் அதன் உற்பத்திகளில் சுமார் 20 வீதத்தை உலகின் 16 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றது. இதன் மூலம் தேசிய பொருளாதாரத்துக்கு அந்நிய செலவாணிகளை சேகரிக்கும் விடயத்திலும், இறக்குமதி செய்யப்படும் டயர்கள் மீதான சார்பு நிலையிலிருந்து விடுவிற்பதற்கும் பெரும் பங்களிப்பை வழங்குகின்றது.

Comments
0

MOST READ
01
02
03
04
05