Mar 27, 2025 - 01:00 PM -
0
செலான் வங்கி, Kedella Construction Expo 2025இன் உத்தியோகபூர்வ வங்கிப் பங்காளராக தொடர்ந்து 13 ஆவது ஆண்டாக பெருமையுடன் கைகோர்க்கிறது. Asia Exhibition and Conventionsஆல் ஏற்பாடு செய்யப்படும் இந்நிகழ்வு மார்ச் 28 முதல் 30 வரை சிறிமாவோ பண்டாரநாயக்க ஞாபகார்த்த கண்காட்சி மையத்தில் (BMICH) நடைபெறவுள்ளது.
இந் நிகழ்வு, வீட்டு வடிவமைப்பு, கட்டுமானம் மற்றும் மேம்பாட்டிற்குத் தேவையான பல்வேறு தயாரிப்புகள், சேவைகள் மற்றும் மூலப்பொருட்களை ஒரே இடத்தில் பார்வையிடும் சந்தர்ப்பத்தை பார்வையாளர்களுக்கு வழங்கும்.
பழைய மற்றும் புதிய வீட்டு உரிமையாளர்களின் கனவுகளுக்கு ஆதரவளிக்கும் நோக்கில் அன்புடன் அரவணைக்கும் வங்கி, வீடமைப்புக் கடன், தனிநபர் கடன், லீசிங் வசதிகள், கடனட்டைகள், நடைமுறை மற்றும் சேமிப்புக் கணக்குகள் மற்றும் பொறுப்புச் சேவைகள் உள்ளிட்ட பல்வேறு வங்கிச் சேவைகளை வழங்குவதன் மூலம் தனது வாடிக்கையாளர்களின் நலன்களை மேம்படுத்த தயாராக உள்ளது. வங்கியின் பரந்த சேவைகளை ஆராய ஆர்வமுள்ள வாடிக்கையாளர்களுக்காக செலான் வங்கி காட்சிக்கூடத்தை உருவாக்க உள்ளது.
இந் நிகழ்வின் தனித்துவமான அம்சமாக, செலான் வங்கியின் காட்சிக்கூடம், எளிமையான தீர்வுகளுடனான சிக்கலற்ற நிதிச் சேவைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்க தயாராக உள்ளது. செலான் வீடமைப்பு மற்றும் தனிநபர் கடன்களுக்கு விண்ணப்பிக்கும் வாடிக்கையாளர்களுக்கு வங்கியின் ‘வீடமைப்புக் கடன் நிபுணர்கள்’ உதவுவார்கள். வங்கியின் ‘வீடமைப்புக் கடன் நிபுணர்கள்’, கடனைப் பெறும் வரை வாடிக்கையாளர்களுக்கு செயன்முறை தொடர்பான விளக்கங்கள், சரிபார்ப்புகள் மற்றும் தற்போதைய நிலைகள் தொடர்பான தகவல்களைத் தொடர்ந்து வழங்கி தடையற்ற அனுபவத்தை உறுதி செய்வர். மேலும், செலான் வங்கியின் போட்டிமிக்க வட்டி வீதங்களை வழங்குவதற்கு தயாராக உள்ளனர்.
மேலதிகமாக, அதிகரித்து வரும் மின்சாரக் கட்டணச் செலவைக் குறைப்பதற்கான ஒரு சிறந்த வாய்ப்பாக செலான் சூரிய மின்சக்தி கடன் தொடர்பாகவும் வாடிக்கையாளர்கள் தகவல்களைப் பெற முடியும். நாடெங்கிலும் மின் நுகர்வு அதிகரித்து வரும் வேளையில், செலான் வங்கியின் 35இற்கும் மேற்பட்ட வணிகர் வலையமைப்பு மூலம் வாடிக்கையாளர்கள் குறைந்த வட்டி வீதத்தில் அதிகரித்து வரும் மின்சாரக் கட்டணங்களைத் தீர்க்க பொருத்தமான தொழில்நுட்பத்தை திறம்படப் பயன்படுத்தலாம்.
Kedella Construction Expo உடனான வங்கியின் நீண்டகால பங்களிப்பு குறித்து செலான் வங்கியின் சந்தைப்படுத்தல் மற்றும் விற்பனை உதவி பொது முகாமையாளர் ஆசிரி அபயரத்ன கருத்து தெரிவிக்கையில், Kedella உடனான எங்கள் ஒத்துழைப்பை புதுப்பித்து அதன் புதிய பரிணாமத்தில் இணைவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். செலான் வங்கியில் வீட்டு உரிமையாளர்களுக்கு சிறந்த தீர்வுகளை வழங்கி அவர்கள் தங்களுக்கென வீட்டைக் கட்டவோ அல்லது புதுப்பிக்கவோ வாய்ப்பினை வழங்கும் எங்கள் பகிரப்பட்ட ஆர்வத்திற்கான ஒரு தனித்துவமான இடமாக Expoவை நாங்கள் கொண்டாடுகிறோம். என்றார்.
Kedella Construction Expo 2025 கட்டுமானம் தொடர்பான பல்வேறு வகையான பொருட்கள், தயாரிப்புகள் மற்றும் சேவைகளை விற்பனை செய்யும் 200இற்கும் மேற்பட்ட வர்த்தக காட்சிக்கூடங்களை கொண்டிருக்கும். தனிநபர்கள் மற்றும் வணிகங்கள் ஆகிய இரு தரப்பினருக்கும் கட்டுமானப் பொருட்கள் முதல் வீட்டு உபகரணங்கள் மற்றும் அலங்காரங்கள், வீட்டுவசதி, real estate, நில வடிவமைப்பு தெரிவுகள், தளபாடங்கள், கூரை அமைப்புகள், பாதுகாப்பு மற்றும் அது சார்ந்த அமைப்புகள், கட்டிடக்கலை மற்றும் பொறியியல் ஆலோசனை, காப்பீட்டு நிறுவனங்கள் மற்றும் பலவற்றைப் பார்வையிட சிறந்த தளமாக இது செயல்படுகிறது.