Mar 27, 2025 - 02:28 PM -
0
கொம்பனித் தெருவில் உள்ள இரவு விடுதியில் ஏற்பட்ட மோதல் தொடர்பாக சரணடைந்த நான்கு சந்தேகநபர்களும் ஏப்ரல் 1 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் இன்று (27) கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நேற்று (26) கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தில் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்ட பின்னர் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.
அண்மையில் நடந்த இந்த மோதல் தொடர்பாக யோஷித ராஜபக்ஷ கடந்த 25 ஆம் திகதி கொம்பனித் தெரு பொலிஸ் நிலையத்தில் சுமார் 3 மணி நேரம் வாக்குமூலம் அளித்திருந்தார்.
இந்த மோதலில் சம்பவ இடத்தில் இருந்த பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தாக்கப்பட்டதில் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.

