Mar 27, 2025 - 08:09 PM -
0
எம்பிலிப்பிட்டிய பனாமுர பகுதியில் இன்று (27) மாலை பெய்த கனமழையால் பல பகுதிகளில் மண் மேடுகள் சரிந்துள்ளன.
பனமுர பொலிஸ் பிரிவில் உள்ள கெம்பனே, ஓமல்பே, கொடவெல, தாபனே, தொரப்பனே ஆகிய பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
கனமழை காரணமாக, எம்பிலிப்பிட்டிய - தொரப்பனே வீதியின் இருபுறமும் கொடவெல மற்றும் கெம்பனே பகுதிகளில் மண் மேடுகள் மற்றும் மரங்கள் சரிந்து விழுந்து வீதியை மூடியுள்ளன.
தொரப்பனேயிலிருந்து ஊருபொக்க செல்லும் வீதியும் கொடவெலகந்த மற்றும் கெம்பனே பகுதிகளில் தடைப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, மக்கள் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.