Mar 27, 2025 - 09:08 PM -
0
பொத்துவில் பிரதேசத்தில் பெண் ஒருவருடன் திருமணம் கடந்த உறவில் ஈடுபட்ட போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை முகநூலில் பதிவேற்றம் செய்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட மட்டக்களப்பு மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவில் கடமையாற்றி வரும் மட்டு மாவட்டத்தைச் சேர்ந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் பணியில் இருந்து நேற்று (26) இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
பொத்துவில் பிரதேசத்தில் திருமணமான பெண் ஒருவருடன், குறித்த பொலிஸ் அதிகாரி தவறான உறவில் ஈடுபட்டபோது அதனை புகைப்படம் எடுத்து முகநூலில் பதிவேற்றம் செய்த சம்பவம் தொடர்பாக கடந்த செவ்வாய்கிழமை (25) பொத்துவில் பொலிஸார், மட்டக்களப்பு மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவில் கடமையாற்றி வந்த பொலிஸ்கான்ஸ்டபிளை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவரை பொத்துவில் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய போது, அவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தவிட்டார்.
இந்த சம்பவத்தையடுத்து குறித்த பொலிஸ் கான்ஸ்டபிளை பணியில் இருந்து இடை நிறுத்த பொலிஸ் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளமை தொடர்பில் பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இதேவேளை கடந்த ஜனவரி தொடக்கம் இதுவரை மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒழுக்கும் மீறி நடந்து கொண்ட 3 பொலிஸாரை பணியில் இருந்து இடைநிறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
--