Mar 28, 2025 - 08:16 AM -
0
கொமர்ஷல் வங்கியானது அண்மையில் ஹவ்லொக் சிட்டி மோல் ஏற்பாடு செய்திருந்த சிறுவர்கள் ஓவியப் போட்டி நிகழ்வின் உத்தியோகப்பூர்வ வங்கி பங்குதாரராக தனது ஆதரவினை வழங்கியிருந்தது. 4 வயது முதல் 16 வயதுக்குட்பட்ட 1,500 க்கும் மேற்பட்ட சிறுவர்கள் இந்தப் போட்டியில் பங்கேற்றனர்.
HCM படைப்பாற்றல் வெற்றித் தலைவர்கள் 2025 எனப் பெயரிடப்பட்ட இந்தப் போட்டியானது, கொமர்ஷல் வங்கியின் பிரபலமான சிறுவர்கள் சேமிப்புக் கணக்கான 'அருணலு' வுடன் தொடர்புடையதாகும். மேலும் வெற்றியாளர்களுக்கான வெற்றிக்கிண்ணங்கள் மற்றும் பரிசில்களை வங்கி வழங்கியது. மேலதிகமாக, இந்த நிகழ்வில் கொமர்ஷல் வங்கியின் கூடத்திற்குச் சென்ற ஒவ்வொரு குடும்பத்தினரும் இலவசமாக புகைப்படம் எடுத்துக்கொள்ளும் வாய்ப்பைப் பெற்றனர், மேலும் அன்றைய தினம் அருணலு சேமிப்புக் கணக்குகளைத் திறந்தவர்களுக்கு மேலதிக பரிசில்களும் வழங்கப்பட்டன.
கொமர்ஷல் வங்கியின் முதன்மையான சிறுவர்கள் சேமிப்புக் கணக்கான அருணலு, சிறுவர் கணக்குகளுக்கு அதிக வட்டி விகிதத்தை வழங்குவதுடன் மேலும், வங்கியில் கணக்கு வைத்திருக்கும் மாணவர்கள் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் தங்கள் பாடசாலைகளில் முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களைப் பெற்று சித்தியடையும் பட்சத்தில் சிறப்பு ரொக்கப் பரிசில்களை வழங்குகிறது.