Mar 28, 2025 - 08:35 AM -
0
மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் போது ஷிராணி பண்டாரநாயக்கவை பிரதம நீதியரசர் பதவியில் இருந்து நீக்க எடுக்கப்பட்ட முடிவை தான் அங்கீகரிக்கவில்லை என்று பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
முந்தைய அரசாங்கங்கள் எடுத்தது இதுபோன்ற போன்ற தவறான முடிவுகளை தற்போதைய அரசாங்கம் எடுக்கக்கூடாது என்று அவர் சுட்டிக்காட்டினார்.
தற்போது பதவியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை பதவியில் இருந்து நீக்க ஆளும் கட்சி சமர்ப்பித்த முன்மொழிவு தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.