Mar 28, 2025 - 11:59 AM -
0
ஐ.பி.எல். 2025 தொடரின் 7 ஆவது லீக் போட்டி ஐதராபாத்தில் நேற்று (27) இடம்பெற்றது. இதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின.
நாணய சுழற்சியில் வென்ற லக்னோ அணி தலைவர் ரிஷப் பண்ட் பந்துவீச்சு தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய ஐதராபாத் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 190 ஓட்டங்கள் எடுத்தது. டிராவிஸ் ஹெட் அதிகபட்சமாக 47 ஓட்டங்கள் எடுத்தார்.
லக்னோ அணி சார்பில் ஷர்துல் தாகூர் 4 விக்கெட் வீழ்த்தினார்.
தொடர்ந்து களமிறங்கிய லக்னோ அணி 16.1 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 193 ஓட்டங்களை எடுத்து அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில், இந்தப் போட்டியில் நிகோலஸ் பூரன் 18 பந்தில் அரை சதமடித்து அசத்தினார்.
இதன்மூலம் ஐ.பி.எல். வரலாற்றில் எந்த வீரரும் செய்யாத சாதனையை படைத்துள்ளார்.
ஐ.பி.எல். தொடரில் 20 அல்லது அதற்கும் குறைவான பந்துகளில் அதிக அரை சதங்களை அடித்த வீரர்கள் பட்டியலில் நிகோலஸ் பூரன் முதல் இடத்திற்கு முன்னேறி இருக்கிறார். அவர் இதுவரை ஐ.பி.எல். தொடரில் 4 முறை 20 இற்கும் குறைவான பந்துகளில் அரை சதம் அடித்து அசத்தியுள்ளார்.

