செய்திகள்
அனுராதபுரம் வைத்தியர் விவகாரம் - சந்தேகநபர் அடையாள அணிவகுப்புக்கு

Mar 28, 2025 - 12:44 PM -

0

அனுராதபுரம் வைத்தியர் விவகாரம் - சந்தேகநபர் அடையாள அணிவகுப்புக்கு

அனுராதபுரம் வைத்தியசாலையில் பெண் வைத்தியர் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் தொடர்பான வழக்கு இன்று (28) அனுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது. 

சந்தேக நபர் இன்று அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்தப்படவுள்ளார், மேலும் குறித்த வைத்தியரும் இன்று நீதிமன்றத்திற்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

வழக்கு தொடர்பில் கடந்த இரண்டு தடவைகளிலும் அவர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

குறிப்பு: - நீதிமன்ற செய்திகளுக்கு உங்கள் தனிப்பட்ட கருத்துக்களை பதிவு செய்வதை அத தெரண ஆசிரியர் குழாம் தடைசெய்துள்ளது

MOST READ
01
02
03
04
05