Mar 28, 2025 - 03:07 PM -
0
மியான்மரைத் தாக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, தாய்லாந்தின் தலைநகர் பாஙகொக்கில் கட்டுமானத்தில் இருந்த உயரமான கட்டிடம் இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்ததோடு 50 பேர் காயமடைந்துள்ளதாக தாய்லாந்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பாங்கொக்கில் உள்ள சதுச்சக் பூங்காவில் உள்ள ஒரு உயரமான கட்டிடம் சில நொடிகளில் இடிந்து விழுந்ததாக பாங்கொக்கின் அவசர மருத்துவம் தொடர்பான தேசிய நிறுவனம் தெரிவித்துள்ளது.
கட்டிடம் இடிந்து விழுந்ததில் 43 பேர் உள்ளே சிக்கியுள்ளதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும், குறித்த கட்டிடம் 20 தளங்களைக் கொண்டது என்றும் தெரிவிக்கப்பட்டுகிறது.