செய்திகள்
வைத்தியர் விவகாரம் - அடையாள அணிவகுப்பில் சந்தேகநபர் அடையாளம்

Mar 28, 2025 - 03:15 PM -

0

வைத்தியர் விவகாரம் - அடையாள அணிவகுப்பில் சந்தேகநபர் அடையாளம்

அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பெண் வைத்தியர் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இன்று (28) அனுராதபுரம் பிரதான நீதவான் நாலக சஞ்சீவ ஜெயசூரிய முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார். 

நீதவானின் உத்தியோகபூர்வ அறையில் நடந்த அடையாள அணிவகுப்புக்குப் பிறகு, சந்தேக நபரை பாதிக்கப்பட்ட வைத்தியர் அடையாளம் காட்டினார். 

பின்னர் சந்தேக நபர் மீண்டும் நீதவான் முன் ஆஜர்படுத்தப்பட்டு ஏப்ரல் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது. 

இதேவேளை, நீதிமன்ற விசாரணையின் போது, ​​சந்தேக நபர் விசேட வாக்குமூலம் ஒன்றை அளிக்க அனுமதி கோரியுள்ள நிலையில், அதற்கான வாய்ப்பு இருப்பதாக பிரதான நீதவான் தெரிவித்துள்ளார்.

குறிப்பு: - நீதிமன்ற செய்திகளுக்கு உங்கள் தனிப்பட்ட கருத்துக்களை பதிவு செய்வதை அத தெரண ஆசிரியர் குழாம் தடைசெய்துள்ளது

MOST READ
01
02
03
04
05