Mar 28, 2025 - 03:25 PM -
0
கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம் இன்று (28) கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் அமைச்சர் சந்திரசேகர் மற்றும் வட மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகம் இணை தலைமையில் ஆரம்பமானது.
இன்று காலை 9 மணியளவில் ஆரம்பமான குறித்த கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான இளங்குமரன், ரஜீவன் கிளிநொச்சி அரசாங்க அதிபர் எஸ் முரளீதரன் பொலிஸார், விசேட அதிரடிப்படையினர், அரச திணைக்களங்களின் அதிகாரிகள் பிரதேச செயலாளர்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளர்.
கிளிநொச்சி மாவட்டத்தில் வீதி அபிவிருத்தி திணைக்களத்தால் கிளிநொச்சி மாவட்டத்தில் 1,325 மில்லியன் ரூபா செலவில் 19.70 கிலோமீற்றர் வீதிகள் இந்த ஆண்டு புனரமைக்கப்படவுள்ளதாக இன்று நடைபெற்ற கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
--