Mar 28, 2025 - 03:49 PM -
0
வலிகாமம் வடக்கு பிரதேச செயலகத்தின் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரும் வலிகாமம் வடக்கு பிரதேச ஒருங்கிணைப்பு குழு தலைவருமான வைத்தியர் எஸ்.ஸ்ரீ பவானந்தராஜா தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இக்கலந்துரையாடல் சுமார் நான்கு வருடங்களின் பின்னர் வலிகாமம் வடக்கு பிரதேச செயலகத்தில் நடைபெற்ற ஒருங்கிணைப்பு குழு கூட்டமாக காணப்படுகின்றது.
நான்கு வருட காலமாக அபிவிருத்தி குழு கூட்டம் பிரதேச செயலகத்தில் நடைபெறாமையால் நீண்ட காலமாக தீர்க்கப்படாத பல பிரச்சனைகள் இக்கலந்துரையாடலில் கலந்துரையாடப்பட்டது.
பலாலி விமான நிலைய அபிவிருத்தி காணி விடுவிப்பு, கடற்றொழில், விவசாயம் வீதிகளின் அபிவிருத்தி, சுகாதாரம், நீர்ப்பாசனம், விவசாயம் போன்ற விடையங்கள் இங்கு பிரதானமாக கலந்துரையாடப்பட்டது.
இக்கலந்துரையாடலில் வழிகாமம் வடக்கு பிரதேச செயலாளர் S.சிவகெங்கா துறை சார்ந்த அதிகாரிகள் வலிகாமம் வடக்கு பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் பொதுமக்கள் என பலரும் கலந்து கலந்துகொண்டனர்.
--