Mar 28, 2025 - 11:24 PM -
0
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 8ஆவது லீக் போட்டியில் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணி சென்னை சுப்பர் கிங்ஸ் அணியை 50 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளது.
இன்று (28) சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இடம்பெற்ற மேற்படி போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ரோயல் செலஞ்சர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 196 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
பின்னர், 197 என்ற வெற்றி இலக்கை நோக்கிய களமிறங்கிய சென்னை சுப்பர் கிங்ஸ் அணி, 20 ஓவர்களில் 8 விக்கட்டுக்களை இழந்து 148 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.