வடக்கு
பொலிஸார் சட்ட நடவடிக்கை எடுப்போம்!

Mar 29, 2025 - 11:11 AM -

0

பொலிஸார் சட்ட நடவடிக்கை எடுப்போம்!

பொலிஸாரின் அராஜகங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் சிறீ பவானந்தராஜா தெரிவித்துள்ளார்.

சங்கானை பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தின் பின் ஊடகவியலாளரின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே இதனை தெரிவித்தார்.

 

கேள்வி -அண்மை காலமாக பொலிஸாரின் அடாவடிகள் அதிகரித்துள்ளன. கடந்த சில தினங்களுக்கு முன்னர் கூட பொலிஸார் நெல்லியடியில் ஒரு வீட்டுக்குள் சென்று அடாவடியில் ஈடுபடுகின்ற காணொளி வெளியாகி இருந்தது. இதற்கு நீங்கள் என்ன நடவடிக்கை எடுக்கின்றீர்கள்.

 

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

 

பதில் - பொலிஸாருக்கு போதிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. இருந்தாலும் பொலிஸார் சில இடங்களில் தாங்கள் நினைத்தபடிதான் நடந்துகொண்டு இருக்கின்றனர். அவர்களது செயற்பாடுகள் பிழையாக இருந்தால் அந்த பொலிஸாருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்போம் என்றார்.

Comments
0

MOST READ
01
02
03
04
05